×
 

இரண்டாக உடையும் காங்கிரஸ்!! விஜய் போட்ட தூண்டிலால் ஆட்டம் காணும் கூட்டணி! புதிய கட்சி துவக்கம்?!

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் முடிவை டில்லி மேலிடம் எடுக்குமானால், சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் கட்சி உடைய வாய்ப்புள்ளது.

சென்னை: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. திமுகவுடன் தொடர்ந்து கூட்டணியில் இருக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் கூட்டணி அமைக்கும் முடிவை டெல்லி மேலிடம் எடுத்தால், கட்சி உடைய வாய்ப்பு உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

காங்கிரஸ் மேலிடம் திமுகவுடன் கூட்டணியைத் தொடர்வதில் உறுதியாக உள்ளது. அதிக தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கோரி காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸுக்கு குறைந்த செல்வாக்கே உள்ளதால், திமுக இந்தக் கோரிக்கைகளை ஏற்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக போன்ற கூட்டணிக் கட்சிகளும் காங்கிரஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று திமுகவுக்கு அழுத்தம் தருகின்றன.

இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் ஆட்சியில் பங்கு வழங்குவோம் என்று காட்டிய ஆசை, காங்கிரஸ் உட்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸில் சிலர் விஜயை ரகசியமாகச் சந்தித்து பேசியதாகவும், திமுக அரசை விமர்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: விஜய் கொடுத்த கேரண்டி!! திமுகவை உதறித்தள்ளும் ராகுல்காந்தி! தவெக + காங்., கூட்டணி கன்பார்ம்!

ஆனால், மூத்த தலைவர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் தவெகவுடன் கூட்டணி அமைப்பது தவறு என்று கருதுகின்றனர். திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவது தற்கொலைக்கு சமம் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். டெல்லி மேலிடம் தவெகவுடன் கூட்டணி முடிவு எடுத்தால், சிதம்பரம் தலைமையில் கட்சி உடைய வாய்ப்பு உள்ளதாகவும், மீண்டும் 'காங்கிரஸ் ஜனநாயக பேரவை' போன்ற அமைப்பு உருவாகலாம் என்றும் பேசப்படுகிறது.

சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறுகையில், "சிதம்பரம் மத்திய அமைச்சராக பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர். அவருக்கு ராஜ்யசபா தொடர திமுக ஆதரவு தேவை. எனவே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். மேலிடத்தை சந்தித்து தன் கருத்தை வலியுறுத்த உள்ளார். அதற்குப் பிறகும் தவெக கூட்டணி உறுதியானால், தனி முடிவு எடுப்பார்" என்றனர்.

கடந்த 2001இல் தமாகா தலைவர் மூப்பனாரை எதிர்த்து சிதம்பரம் 'காங்கிரஸ் ஜனநாயக பேரவை' தொடங்கி திமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றதை அவர்கள் நினைவூட்டுகின்றனர்.

இதற்கிடையில், புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது திமுக-காங்கிரஸ் உறவு வலுவாக உள்ளதை காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: காத்திருக்கும் அரசியல் சதுரங்கம்!! கச்சிதமாய் காய் நகர்த்தும் விஜய்! தவெகவின் கூட்டணி கணக்கு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share