வாரிசு என்றாலே சிலருக்கு எரிகிறது...! அமைச்சர் PTR -க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..!
நமது எதிரிகள் வாய்களை மெல்லக் கூடிய ஆட்கள் மட்டுமல்ல. அவதூறுகளுக்கு உங்கள் சொல் ஆகி விடக்கூடாது
''நீதிக் கட்சிக்கு முடிவே கிடையாது, நீதிக்கட்சியின் நீட்சிதான் திமுக ஆட்சி. நாம் எல்லாம் திராவிட வாரிசு, வாரிசு என்றாலே சிலருக்கு எரிகிறது'' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
'தமிழ்வேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு' நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், ''பழனிவேல் தியாகராஜனை பொறுத்தவரைக்கு அறிவார்ந்த, கடுமையான வாதங்களை வைக்கக்கூடியவர்.நான் அவருக்கு கூறவேண்டியது இந்த சொல்லாற்றல் பலமாக இருக்க வேண்டுமே தவிர, பலவீனமாகி விடக்கூடாது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் அது அவருக்கே தெரியும்.
இதையும் படிங்க: Out of contact-ல் மு.க.ஸ்டாலின்... தமிழக மக்களுக்கு அச்சுறுத்தல்: அண்ணாமலை ஆத்திரம்..!
நமது எதிரிகள் வாய்களை மெல்லக் கூடிய ஆட்கள் மட்டுமல்ல. அவதூறுகளுக்கு உங்கள் சொல் ஆகி விடக்கூடாது என்பதற்காக உங்கள் மீது கொண்ட அக்கறையால் நான் இதைச் சொல்கிறேன். என் சொல்லைத் தட்டாத பிடிஆர் எனது அறிவுரையையும், ஆதங்கத்தையும் புரிந்து கொள்வார் என நம்புகிறேன். நீதிக் கட்சிக்கு முடிவே கிடையாது, நீதிக்கட்சியின் நீட்சிதான் திமுக ஆட்சி. நாம் எல்லாம் திராவிட வாரிசு, வாரிசு என்றாலே சிலருக்கு எரிகிறது'' எனத் தெரிவித்தார்.
அடுத்து பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ''வி.பி.சிங்கை 'சமூக நீதி காவலர்' என்று அழைப்தைப் போல, நமது முதலமைச்சரை 'மாநில உரிமை காவலர்' என்று அழைக்கலாம். மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து போராடி பல வெற்றிகளைக் குவித்து, நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்தியில் பாஜக அரசுக்கு நாங்கதான் எதிர்கட்சி… கங்கிரஸை கதறவிட்டு கெத்துக் காட்டும் மு.க.ஸ்டாலின்..!