×
 

டெல்லி போராட்டக்காரர்களிடம் சிக்கிய ‘கருப்பு ஆடு’... மிகப்பெரிய சதி முறியடிப்பு?... பொளந்தெடுத்த பஞ்சாபிகள்...!

டெல்லி போராட்டத்தில் போலீசார் மீது கல் வீச முயன்ற இளைஞர் கைது

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்தின்போது, போலீசார் மீது கல் வீச முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜந்தர் மந்தர் பகுதியில் காக்ரோச் ஜனதா பார்ட்டி உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக கூறப்படும் நிலையில், இன்றும் அதேபோன்ற சூழல் நிலவுகிறது.

இதையும் படிங்க: இந்தியா முழுவதும் இளைஞர்கள் எழுச்சி..! நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு..!!

போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க போராட்ட ஒருங்கிணைப்பாளர்களே தங்களுக்குள் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருந்தனர். சுமார் 10 பேர் மனித அரண் அமைத்து, அந்த எல்லையை யாரும் தாண்டக் கூடாது என்று கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை திடீரென ஒரு இளைஞர் சாலையில் இருந்த கற்களில் ஒன்றை எடுத்து போலீசார் மீது வீச முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்தனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஒருவரின் தவறான செயலால் ஒட்டுமொத்த மாணவர்களின் போராட்டமும் பாதிக்கப்படக் கூடாது என்பதையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் காரணமாக இன்று அதிகாலையிலேயே அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதனிடையே, பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து சன்செட் மார்க் செல்லும் சாலையில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 500-க்கும் மேற்பட்ட ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் (Rapid Action Force) வீரர்களும் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், போலீசார் மீது கல் வீச முயன்ற சம்பவம் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், இன்று காலை 11 மணிக்கு அபிஷேக் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில், அந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதா, இல்லையா என்பது குறித்து அப்போது முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அபிஷேக் தனது சமூக வலைதள பதிவில், "மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும். மாணவர்களும் இளைஞர்களும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share