மீண்டும் விரிசல்... எஸ்.பி.வேலுமணிக்கு ஷாக் கொடுத்த தங்கமணி... சல்லி சல்லியாய் நொறுங்கும் அதிமுக...!
எஸ்.பி. வேலுமணி அறிவிப்புக்கு மாறாக தங்கமணி முடிவெடுத்திருப்பதாகத் வெளியாகியுள்ள தகவல் அதிமுகவில் அனலைக் கிளப்பியுள்ளது.
எஸ்.பி. வேலுமணி தலைமையிலான இபிஎஸ் அதிருப்தியாளர்களுக்குள் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.பி. வேலுமணி அறிவிப்புக்கு மாறாக தங்கமணி முடிவெடுத்திருப்பதாகத் வெளியாகியுள்ள தகவல் அதிமுகவில் அனலைக் கிளப்பியுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாததைக் கண்டித்தும், அதேபோல் மேகதாது விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்ட தமிழக அரசைக் கண்டித்தும், இன்றைய தினம் அதிமுக சார்பில் சென்னை நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தஞ்சையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் சூழ்நிலையில், ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோர் எந்தெந்த மாவட்டங்களில் தலைமை ஏற்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவார்கள் என்ற பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: எம்ஜிஆர் ஆவி எஸ்.பி.வேலுமணியை சும்மாவே விடாது.! Ex.அமைச்சர் பொன்னையன் விமர்சனம்.!
இந்த நிலையில், நேற்றைய தினம் சம்பந்தப்பட்ட தங்களது சொந்த மாவட்டங்களில் இந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்துவதற்கு தங்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், இந்தப் போராட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கூட்டாக ஒரு கடிதத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்திருந்தனர்.
இந்த நிலையில், எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளராகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் தங்கமணி, எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு இணங்க, தற்போது சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கிறார்.
ஏற்கனவே தாங்கள் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பதவிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், தற்போது அதிருப்தியாளர்களிடையே ஒரு பிளவு ஏற்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
ஏனென்றால், நேற்றைய தினம் எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூட்டாக ஒரு கடிதத்தை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியிருந்த நிலையில், எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளராகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் தங்கமணி, தற்போது சேலம் மாவட்டத்தில் நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், தங்கமணிக்கு நாமக்கல் மாவட்டம் தான் அவரது சொந்த மாவட்டமாகக் கருதப்படுகிறது. அவருக்கும் அவரது சொந்த மாவட்டத்தில் தலைமையேற்று நடத்துவதற்கு வாய்ப்பு வழங்காமல், சேலம் மாவட்டத்தில் அவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டு இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதற்கான உத்தரவும் வழங்கப்பட்டிருந்தது.
தற்போது எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்கு ஏற்றவாறு, தங்கமணி சேலம் மாவட்டத்தில் நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கிறார்.
இதன் மூலமாக, எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்த தங்கமணி தற்போது அணி மாறுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. அவர்களுக்குள் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் ஆனந்தை சந்தித்தது ஏன்? பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!