×
 

தமிழக அரசியலில் பரபரப்பு... காங்கிரஸுக்கு 'NO' சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... ஒபனாக உடைத்துவிட்ட திமுக...!

தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஒத்து வராது என்பது திமுகவிற்கும் தெரியும் காங்கிரஸுக்கும் தெரியும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். 

வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் திமுகா கூட்டணியோடு காங்கிரஸ் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் சார்பில்ஆட்சி அதிகாரத்தில் பங்கு அதிக இடத்தில் போட்டி என்ற கோஷத்தோடு திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்குவார்கள் என்று அவர்களுடைய தலைவர்களே அவ்வப்போது ஆங்காங்கே பேசி வந்தனர். அதற்கெல்லாம் முத்துப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் தற்போது முதலமைச்சருடைய பேச்சு அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இச்சமயத்தில் சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே நிகழ்ச்சியில கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது  என்பது திமுகாவுக்கும் தெரியும் காங்கிரஸுக்கும் தெரியும் என்று நேரடியாகவே கூறியிருக்கிறார்.

 நேற்று  டெல்லியில் காங்கிரஸ்னுடைய மூத்த தலைவர்கள் ஒட்டுமொத்தமாக  கூட்டணி தொடர்பாக பேசியிருக்கிறார்கள். பேசிவிட்டு பின்னர் கட்சியினுடைய மாநில தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்திக்கும் போது  “இன்னமும் தமிழகத்தினுடைய முன்னணி தலைவர்கள் மட்டுமல்லாமல், டெல்லியில் இருக்கக்கூடிய தலைவர்கள் கூட இன்னமும் எங்களை கூட்டணி பேச்சு வார்த்தைக்கு கூப்பிடவில்லையே  என்பதில் வருத்தத்தோடு இருக்கிறார்கள்” என தெரிவித்திருந்தார். தொடர்ந்து கடைசி நேரத்தில இது போன்று கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடத்தும்போது ஏற்கனவே பல மாநிலங்களில் ஒரு கசப்பான சம்பவம் காங்கிரஸுக்கு அமைந்திருப்பதாகவும் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை எப்போது தொடங்கும், திமுகவோடுதான் காங்கிரஸ் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறதா என்ற கேள்வி எல்லாம் எழுந்திருக்கக்கூடிய நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடத்தில் போட்டி என்பதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை என்பதுதான் காங்கிஸுடைய நிலைப்பாடாக இருந்தது. ஆனால் தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதலமைச்சர் பேசியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தில பங்கு என்பது தமிழ்நாட்டில் ஒருபோதும் ஒத்து போகாது என்பதை தீர்க்கமாக கூறியிருக்கிறார். ஒருவேளை இனி திமுக அடுத்த கட்டமாக காங்கிரஸோடு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தும்போது ஒருவேளை கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட 25 தொகுதிகளிலே நீங்க போட்டியிட்டு கொள்ளலாம் என்று கூறுவார் என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்..!! 2026-27 மத்திய பட்ஜெட்டை விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

இதனால் காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிட வழி கிடைக்குமா?, எந்தெந்த இடங்களை திமுக காங்கிரஸுக்கு ஒதுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே புதிதாக கட்சி தொடங்கிய விஜய், தனது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு என ஆஃபரை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எந்த கட்சியுமே அவரோடு சென்று கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு தயாராக இல்லாத ஒரு சூழல் தான் தற்போது நிலவி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் இந்த முறை தவெகாவோடு சென்றுவிடுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  

 ஆட்சி அதிகாரத்தில பங்கு வேண்டும் என்ற கோஷத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களும், அதற்கு எதிரான கோஷங்களை திமுகவினரும் தொடர்ச்சியாக சோசியல் மீடியாக்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, தற்போது முதலமைச்சர் இதுபோன்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இனி காங்கிரஸ்னுடைய அடுத்த நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதுதான் தற்போதைய நிலை. 
இன்று தமிழக முதலமைச்சரை சந்தித்து நேற்று டெல்லியில் நடந்த நிகழ்வு தொடர்பாக செல்வ பெருந்தகை பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நாங்கள் வருத்தத்தோடு இருக்கிறோம். தமிழக முதலமைச்சரை எங்களுடைய வருத்தத்தை டெல்லியில் இருக்கக்கூடிய தலைமையில் என்ன சொல்லி இருக்கிறதோ அதை நேரடியாக வந்து முதலமைச்சரை சந்தித்து நாங்கள் இன்று அல்லது நாளை பேசுவோம் என்று செல்வ பெருந்தகை தெரிவித்திருந்த நிலையில் தான், தற்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்பதை திட்டவட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துவிட்டார். இனி இரு தரப்பும் சந்தித்து பேசுவார்களா? திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? என்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் கேள்விகளாக அமைந்துள்ளன. 

இதையும் படிங்க: எச்.ராஜா எப்படி இருக்காரு..?? நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share