×
 

மாற்றி பேசும் CM ஸ்டாலின்..! 2024 பங்கேற்க மாட்டேன்.. 2025 பங்கேற்பேன்..!

அமலாக்குத்ததுறை அதிகாரிகள் கூறியதாவது விசாகன் வீட்டருகே கிடைத்த கிழித்து வீசப்பட்ட ஆவணம் ஒன்றில் அன்பு தம்பி என குறிப்பிட்டு டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடு விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன் என கெத்து காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரே ஒரு அமலாக்கத்துறை ரெய்டுக்குப் பிறகு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். 

திமுக முக்கிய புள்ளிக்கு குறி? 

டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் 1000 கோடி ஊழல் தொடர்பாக கடந்த வாரம் சென்னையில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல ஆவணங்கள் சிக்கின. இது குறித்து அமலாக்குத்ததுறை அதிகாரிகள் கூறியதாவது விசாகன் வீட்டருகே கிடைத்த கிழித்து வீசப்பட்ட ஆவணம் ஒன்றில் அன்பு தம்பி என குறிப்பிட்டு டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடு விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: “அனைத்து நாட்களும்... 24 மணி நேரமும் இயங்கலாம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு...!

அந்த துறையின் முன்னாள் அமைச்சர் நிதி மற்றும் உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய தகவல்களும் உள்ளன. யார் யாரிடம் எத்தகைய மதுபானங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட குறிப்புகளும் கிடைத்துள்ளதாகவும், கிடைத்துள்ளன ஆவணத்தில் இருந்த உரையாடல்கள் சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகரில் வசித்து வரும் தொழிலதிபர் ரதீஷ் மற்றும் விசாகன் இடையே நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. 

டாஸ்மாக் மதுபான கூடம் டெண்டர் விவகாரத்தில் ரதீஷ் தலையீடு அதிகம் இருந்துள்ளது. டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் எம்ஆர்சி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை டீலிங் பேசும் இடமாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பி ரதீஷிடம் விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் திமுக முக்கிய புள்ளி ஒருவர் சிக்கக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அந்த திமுக முக்கிய புள்ளி உதயநிதி ஸ்டாலின் தான் என்றும் சில எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

அந்தர் பல்டி அடித்த ஸ்டாலின்: 

மத்திய அரசு - திமுக அரசு இடையிலான மோதல் போக்கு அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை என்றும், தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் மத்திய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாய் புறக்கணிப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

தற்போது டாஸ்மாக் ரெய்டு,  1000 கோடி ஊழல் விவகாரம் என அமலாக்கத்துறை வசம் வசமாக சிக்கியதை அடுத்து அதில் இருந்து தப்பிக்க மத்திய அரசிடம் இணக்கம் காட்ட திமுக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மே 24ம் தேதி டெல்லியில் நடக்கவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். இதற்காக மே 23ம் தேதியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்படவுள்ளார். அப்போது அவர் பாஜக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 


 

இதையும் படிங்க: பொன்முடி சர்ச்சையில் மிஸ் ஆன முக்கிய தகவல்... உளவுத்துறையை லெப்ட் ரைட் வாங்கிய முதல்வர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share