திருநங்கைகள் உரிமை பறிபோகும் அபாயம்... மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு...!
நாடாளுமன்றத்தில் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
கடந்த வாரம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2019 திருத்த மசோதாவை மக்களவையில் முன்மொழிந்தார். 2019-ஆம் ஆண்டின் முந்தைய சட்டத்தில் திருத்தங்களைச் செய்து, திருநங்கைகளின் உரிமைகளை வரையறுக்கும் புதிய சட்ட அங்கீகாரத்தை முன்மொழிகிறது. முக்கியமாக, சுயமாகப் பாலினத்தை அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, மருத்துவக் குழுவின் சான்றிதழை கட்டாயமாக்குகிறது.
இந்த மசோதாவில் சுய அடையாளத்திற்குப் பதிலாக, தலைமை மருத்துவ அதிகாரி தலைமையிலான மருத்துவக் குழுவின் சான்றிதழ் மூலம் மட்டுமே திருநங்கை/திருநம்பி என்ற சான்றிதழைப் பெற முடியும். ஒருவரை வற்புறுத்தி அல்லது ஏமாற்றி திருநங்கை அடையாளத்திற்கு மாற்றச் செய்வது (உதாரணமாக, அறுவை சிகிச்சை) தண்டனைக்குரிய குற்றமாகும் போன்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மசோதா சுயமாகப் பாலினத்தை உணரும் உரிமையைப் பறிப்பதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள திருநங்கை சமூகத்தினர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சோழவந்தான் தொகுதியில் வெற்றி சரித்திரம் படைக்கணும்..!! 200 தொகுதிகளில் உறுதி..! அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்..!!
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சோசியல் மீடியா பக்கங்களில், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 2019-இல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை, அதனால் பாதிக்கப்படவிருக்கும் மக்களின் கருத்துக்களைக் கேட்காமல் வலுக்கட்டாயமாகச் செயல்படுத்த முடியாது.
பாதுகாப்பு என்ற பெயரில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை, அந்தச் சமூகமே எதிர்க்கும்போது, அது திணிப்பைக் கோராமல், ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதைக் கோருகிறது.
மத்திய பாஜக அரசு முன்னோக்கிச் செல்வதற்கு முன், சற்று நிறுத்தி, திருநங்கைகளுடன் கலந்துரையாடி, ஒரு உண்மையான ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்” என தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் "தீயசக்தி திமுக"..!! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!!