#BREAKING " மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம்" - மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்...!
மதுரை, கோவைக்கு கட்டாயம் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்
சென்னையைத் தொடா்ந்து மதுரை மற்றும் கோவை மாநகரப் பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் இயக்க விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ நிறுவனம் தயாரித்து தமிழக அரசிடம் அளித்திருந்தது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. மதுரையில் திருமங்கலம் முதல் யானைமலை ஒத்தக்கடை வரை 31.93 கிலோ மீட்டா் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த உள்ளது. 27 கி.மீ. உயர்மட்டப் பாதையில் 23 மெட்ரோ ரயில் நிலையங்களும், 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: பீகார் தேர்தல் முடிவுகள்: அனைவருக்குமான பாடம்..!! முதல்வர் ஸ்டாலின் சொல்வது என்ன..??
அதன் படி, மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை மாநில அரசு வாயிலாக, மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. ஊதிய மக்கள் தொகை இல்லை எனக்கு ஒரு மத்திய அரசு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளது.
இதனை கடுமையாக கண்டித்துள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வருவோம் என உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்! எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களின் உழைப்புக்கு அங்கீகாரம்..!! 3 வேளையும் இலவச உணவு..!! வரும் 15ம் தேதி தொடக்கம்..!!