“தீ_பரவட்டும்...” - டெல்லிக்கு பயம் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... வைரலாகும் வீடியோ...!
தொகுதி மறுவரை நகலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீயிட்டு கொழுத்தி தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
மத்திய அரசு நாடாளுமன்றத் தொகுதி வரையறை சட்ட திருத்த மசோதா தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது . இதன் காரணமாக தமிழகத்தில் தொகுதிகள் குறைக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறி தமிழக முழுவதும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற தமிழக முதல்வரும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.
பா.ஜ.க அரசின் தொகுதி மறு வரையறை என்ற கருப்பு சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் வீதிகளிலும் இன்று கருப்பு கொடி ஏற்றுவோம் என தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் திரு மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று காலை நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லி பாளையத்தில் உள்ள மாநகர அவைத் தலைவர் செல்லப்பன் என்பவரது வீட்டு முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்பு கொடி ஏற்றினார். கருப்பு உடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருப்புக்கொடி ஏற்றி வைத்தார். அப்போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் “பறிக்காதே... பறிக்காதே மாநில உரிமையை பறிக்காதே...”, “தமிழ்நாடு போராடும்”, “தமிழ்நாடு வெல்லும்” என கோஷங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து தொகுதி மறுவரை நகலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீயிட்டு கொழுத்தி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், #Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
இதையும் படிங்க: காலையிலேயே களத்தில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... நடைபயிற்சி சென்றபடி வாக்கு வேட்டை...!
அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது! இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மக்களை பற்றி யோசிக்க டைம் இல்ல.. ஆனா IPL பார்க்கும் முதல்வர் நாட்டுக்கு தேவையா..?? இபிஎஸ் கேள்வி..!!