தளபதிகளை களமிறக்கும் மு.க.ஸ்டாலின் - உதயநிதி கைக்கு போகும் முக்கிய பொறுப்பு...!
தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய ஒரு வருடம் இருக்கக்கூடிய சூழ்நிலையில், திமுக சார்பில் மண்டல பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை தொடங்கவுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு மற்ற கட்சிகளை விட திமுக ரொம்ப ரொம்ப மும்முரமாக தயாராகிட்டு இருக்கு. ஏற்கனவே அந்த கட்சி ஒரு தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை நியமிச்சிருந்தாங்க. அமைச்சர் கே. என்.நேரு தலைமையில அந்த குழுவானது செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க. தேர்தலில் என்னென்ன செய்யணும், , எங்கெங்க நமக்கு சாதகம் இருக்கு பாதகம் இருக்கு அப்படின்னு பல விஷயங்களை அந்த ஒருங்கிணைப்பு குழு செஞ்சுக்கிட்டு இருக்கு. இதற்கு இடையில தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய ஒரு வருடம் இருக்கக்கூடிய சூழ்நிலையில், திமுக சார்பில் மண்டல பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை தொடங்கவுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நாளை அல்லது நாளை மறுநாள் வரக்கூடும் என தெரிகிறது. இந்த சமயத்துல யார் அந்த மண்டல பொறுப்பாளர்கள் அப்படின்ற ஒரு கேள்வியும் எழுந்திருக்கிறது. மொத்தமாக திமுக ஏழு மண்டல பொறுப்பாளர்களை நியமிக்க இருப்பதாக ஒரு தகவல் கிடைச்சிருக்கு. இந்த லிஸ்ட்ல யார் யார் இருக்கறாங்க அப்படின்னு பார்த்தோம்னா. அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் ஏ.வ.வேலு, அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி கனிமொழி, எம்.பி ஆர்.ராசா இவங்க எல்லாம் தான் இந்த லிஸ்ட்ல இருக்காங்க.
இவர்கள் ஒவ்வொருவருக்கும்குறைந்தது ஐந்துலிருந்து ஆறு மாவட்டங்கள் பிரித்து கொடுக்கப்பட்டு, சுமார் 40 தொகுதிகள் வரைக்கும் அவங்க கையில இருக்கிற மாதிரி ஒரு செட் பண்ண போறாங்க. அந்த மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து தேர்தல் விஷயங்களையும் இவங்கதான் ஒருங்கிணைக்கப் போறாங்க. அதாவது தேர்தல்
கூட்டங்கள், எந்த கூட்டத்திற்கு முதல்வர் வரணும், யாரெல்லாம் கலந்துக்கனும் என்பதில் தொடங்கி பிரச்சாரங்கள் எப்படி இருக்க போகுது, என்னென்ன விஷயத்தை ஹைலைட் பண்ணனும், அப்படின்னு எல்லா விஷயத்தையுமே இவங்க தான் பண்ண போறாங்க.
இதையும் படிங்க: மறுபடியும் அவரா? - திமுகவின் கொங்கு கணக்கால் திகைத்துப்போன எடப்பாடி பழனிசாமி!
யாருக்கு எந்தெந்த மாவட்டங்கள் வந்து கொடுக்கப்பட போகுது அப்படின்றதுதான் இப்ப திமுகவில் பரபரப்பா பேசப்பட்டு வரக்கூடிய விஷயமா இருக்கு. அதுமட்டுமல்லாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின இந்த ஒட்டுமொத்த தேர்தல் பொறுப்பாளர்களுக்குமான தலைமையாக இருப்பார் என்ற தகவலும் வெளியாக்யிஉள்ளது. குறிப்பாக இளைஞரணியில ஒரு சில மாற்றங்களை செஞ்சு தேர்தல் பணிகளில்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு முக்கிய பொறுப்பும் இதோடு சேர்த்து கொடுக்கப்படலாம்ன்னு சொல்லி பார்க்கப்படுகிறது. ஆனால் அது குறித்த அறிவிப்புகள் ஜூன் ஒன்றாம் தேதி மதுரையில் திமுகாவுடைய பொதுக்குழுவிற்கு பிறகு வெளியாகும் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வலுவான ஆதாரம் இருந்ததால் தான் நீதி கிடைத்தது..! திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய திருமா..!