×
 

முதல்வராக பதவியேற்ற பின் முதல்முறை.. மு.க.அழகிரியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

மதுரை பழங்காநத்தம் பகுதியில் தனது சகோதரர் மு.க.அழகிரியுடன், முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

திமுக பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக மதுரை சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது மூத்த சகோதரரான மு.க.அழகிரியை நேரில் சந்தித்துள்ளார்.

மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்முறையாக மிக நீண்ட தொலைவுக்கு ரோட் ஷோ மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்முறையாக மிக நீண்ட தொலைவுக்கு ரோட் ஷோ மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்படி மதுரை பெருங்குடி பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு துவங்கி ஆரப்பாளையம் வரை மாநகர பகுதிகளில் 17 கி.மீ தொலைவிற்கு இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்தார்.

இந்நிலையில், பெருங்குடியில் துவங்கி அவனியாபுரம், வில்லாபுரம், ஜெயவிலாஸ் சந்திப்பு, சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், டிவிஎஸ் நகர், பழங்காநத்தம், பொன்மேனி, காளவாசல், குரு தியேட்டர், ஆரப்பாளையம், A.A.ரோடு, புது ஜெயில் ரோடு வழியாக ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் நிறைவடைகிறது. மாலை 5:30 மணி அளவில் ஜெய்ஹிந்த்புரத்தில் வீரகாளியம்மன் கோவில் அருகே திமுக சார்பில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நிரந்தர இரும்பு மேற்கூரையை திறந்து வைத்தார்.

கிட்டத்தட்ட ஒரு நான்கு மணி நேரம் மதுரை முழுவதுமாக மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் வரவேற்பு அளித்த பின்பு, ஆரம்பப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற முதல் முன்னாள் மேயர் முத்துவினுடைய சிலையை முதலமைச்சர் தற்போது திறந்து வைத்தார். 1971-ல் மதுரை நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது அப்போதைய திமுகவில் இருந்த முத்து மேயராக பொறுப்பேற்றார். 

திமுகவினுடைய மிக நீண்ட பாரம்பரியத்தில் மேயர் முத்து இருந்திருக்கிறார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும் மேயர் முத்து முழுமையாக செயல்பட்டிருக்கிறார். ஏற்கனவே இவருடைய சிலை 1999 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது அந்த சிலை புதுப்பிக்கப்பட்டு வெண்கல சிலையாக தற்போது மாற்றப்பட்டிருக்கிறது. ஆறு அடி உள்ள இந்த வெண்கல சிலை ஆரப்பாளையத்தின் பகுதியில் வைக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து மதுரை டி.வி.எஸ் நகரில் உள்ள தனது அண்ணன் மு.க.அழகிரி வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே மு.க.ஸ்டாலின் முதல் முறையாக அழகிரி வீட்டிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share