“கோடான கோடி நன்றிகள்...” - பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!
பிரதமர் கடந்த 2023 ஆம் ஆண்டு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்
தமிழக முதலமைச்சரின் பிரச்சார பொதுக்கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. மகளிர் இட ஒதுக்கீடு குறித்து கோவையில் பேசிய பிரதமரே ஒத்துக்கொண்ட பிறகு அதற்கு விளக்கத்தை கொடுக்க தேவையில்லை மேட்டுப்பாளையம் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கோவை மற்றும் நீலகிரி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உதயசூரியன் மற்றும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டார் அவர் பேசும் பொழுது: கோவையில் நடைபெற்ற பிரதமர் மோடி கலந்து கொண்ட பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் பேசும் பொழுது திமுக நேற்று பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை தடுத்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டி உள்ளார்.
இதே பிரதமர் கடந்த 2023 ஆம் ஆண்டு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார். அப்படி என்றால் நேற்று கொண்டு வந்த சட்டத்திற்கும் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திற்கும் என்ன சம்பந்தம். எந்த சம்பந்தமும் இல்லையே எனவே அவரே ஒத்துக்கொண்ட பிறகு, இதற்குமேல் நாம் எந்த விளக்கத்தையும் கொடுக்கத் தேவையில்லை என்ற அளவிற்கு அவருடைய பேச்சு அமைந்துள்ளது.
இதையும் படிங்க: நெருங்கியது தேர்தல்..! பிரதமரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் பரப்புரை..!!
நமக்காக பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி அவர்களுக்கு கோடான கோடி நன்றி. முன்னதாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கவுண்டம்பாளையம் நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊட்டி கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மதசார்பற்ற திமுக கட்சி சார்பாக போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு கேட்டார் முன்னதாக கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மக்களின் வளர்ச்சிகளுக்கு என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது என்பதையும் எடுத்துக் கூறி பேசினார்.
இதையும் படிங்க: தொகுதி மறு வரையறை அவசியம்..! மக்களவையில் பிரதமர் மோடி உறுதி..!