வாய மூடுங்க!! ஏன் வரல!! அமைச்சர் காந்தியை கண்டித்த முதல்வர்!! சமாதானப்படுத்திய நேரு!
கைத்தறி துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், துறையின் அமைச்சர் காந்தி வராததால், அதிருப்தி அடைந்த முதல்வர் ஸ்டாலின், அவரை கடுமையாக கண்டித்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் தமிழகத்தின் பாரம்பரிய கைவினைப் பொருட்களை உலக அளவில் பிரபலப்படுத்தும் நோக்கில் மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழாவும், சிறந்த கைவினைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நேற்று (பிப்ரவரி 5, 2026) காலை 10 மணிக்கு நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆனால், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்கவில்லை. இதனால் முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து, அமைச்சர் ஏன் வரவில்லை என விளக்கம் கேட்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: டூரிஸ்ட்டுளுக்கு பாதுக்காப்பான மாநிலம் தமிழ்நாடு... உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை..!
கண்காட்சி நிகழ்ச்சி முடிந்த பிறகு, முதல்வர் தலைமைச் செயலகம் சென்றார். அங்கு நகராட்சி நிர்வாகம், பால்வளத் துறை, ஹிந்து சமய அறநிலையத் துறை தொடர்பான பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது தாமதமாக அமைச்சர் ஆர்.காந்தி வந்து, முதல்வருக்கு ஒரு புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
ஆனால், கோபத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின் அதை கோபமாக வாங்கினார். காலை நிகழ்ச்சிக்கு வராததற்காக அமைச்சரை கடுமையாக கண்டித்தார். விளக்கம் அளிக்க காந்தி முயன்றபோது, கையசைவு மூலம் வாயை மூடும்படி எச்சரித்தார். அருகில் இருந்த அமைச்சர் கே.என்.நேருவும் காந்தியை கண்டித்து, ஒரமாக செல்லும்படி கூறினார். செய்வதறியாது திகைத்த அமைச்சர் காந்தி ஓரமாக நகர்ந்து சோகமாக நின்றார்.
பின்னர் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த சம்பவம் தலைமைச் செயலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வரின் கண்டனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கைவினைஞர்களின் திறனை மதிக்கும் வகையில் நடைபெறும் கண்காட்சியில் துறை அமைச்சரின் புறக்கணிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!