குழந்தைங்க எக்ஸாம்ஸ் முடிஞ்சதுமே இத பண்ணுங்க!! பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களை கீழடி அருங்காட்சியகத்திற்கு பெற்றோர் அழைத்து வருமாறு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களை பெற்றோர் அழைத்து வருமாறு உற்சாக அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பதிவில் கூறியதாவது: "கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறப்பு; தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களைப் பெற்றோர் அழைத்து வாருங்கள். கீழடியின் பானை ஓடுகளில் நாம் கண்டெடுத்த தமிழி எழுத்துகள், கடல் கடந்து எகிப்து நாட்டின் பிரமிடுகளிலும் இடம்பெற்றுள்ள மகிழ்ச்சியை மேலும் பெருக்கிடும் வகையில், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்.
ராமநாதபுரம் - நாவாய், ஈரோடு - நொய்யல் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். தமிழர் தொன்மையின் தடங்களைத் தேடித் தேடிக் கண்டறிந்து உலகுக்கு அறிவிப்போம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம்."
இதையும் படிங்க: தொகுதி வாரியாக முதல்வர் மருமகன் அட்ராசிட்டி! திமுகவில் சலசலப்பு!! சபரீசன் பஞ்சாயத்தால் நிர்வாகிகள் கலக்கம்!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ.24.30 கோடி செலவில் 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த திறந்தவெளி அருங்காட்சியகம், சங்க கால நகர நாகரிகத்தின் சான்றுகளை நேரடியாக காட்சிப்படுத்துகிறது.
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறப்பு; தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களைப் பெற்றோர் அழைத்து வாருங்கள்
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 14, 2026
கீழடியின் பானை ஓடுகளில் நாம் கண்டெடுத்த தமிழி எழுத்துகள், கடல் கடந்து, எகிப்து நாட்டின் பிரமிடுகளிலும் இடம்பெற்றுள்ள மகிழ்ச்சியை மேலும் பெருக்கிடும் வகையில், கீழடி திறந்தவெளி… pic.twitter.com/gCDvHqCwup
இரண்டு காட்சி கூடங்களுடன் கூடிய இந்த அருங்காட்சியகம், கீழடி அகழ்வாராய்ச்சியின் முக்கிய கண்டுபிடிப்புகளை பொதுமக்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் எளிதில் பார்வையிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்ட திறந்தவெளி அருங்காட்சியகம் என்பது சிறப்பம்சம்.
முதல்வரின் இந்த அழைப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தேர்வு அழுத்தத்திற்கு பிறகு வரலாற்று அறிவை பெறும் வாய்ப்பாக இது அமையும். கீழடி அகழ்வாய்வு தமிழர்களின் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. தமிழி எழுத்துகள் எகிப்து பிரமிடுகளுடன் தொடர்பு கொண்டிருப்பது தமிழ் பெருமையை உலகுக்கு உணர்த்துகிறது.
ராமநாதபுரம் - நாவாய், ஈரோடு - நொய்யல் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டியது தமிழ் தொல்லியல் ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்தும். தமிழக அரசு தொல்லியல் துறையின் இந்த முயற்சிகள் தமிழ் வரலாற்றை உலக அரங்கில் உயர்த்தும். மாணவர்கள் கீழடி சென்று தங்கள் மூதாதையர்களின் பெருமையை உணர வேண்டும். இது தமிழ் இளைஞர்களுக்கு பெரும் உத்வேகமாக அமையும்.
இதையும் படிங்க: காதலர் தின ஸ்பெஷல்: 3 நாட்களுக்கு அதிரடி ஆஃபர்..!! ஒரு 'டீ' ரூ.1 தானாம்..!! எந்த ஊர்ல தெரியுமா..??