ஆரம்பமே அதிரடி..! மேகதாதுவுக்கு எதிர்ப்பு..! பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் விஜய்..!
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்த சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று காலை சபாநாயகர் பிரபாகர் தலைமையில் தொடங்கியது. இந்த அமர்வு புதிய அரசின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைப் பிரதிபலித்தது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளின் கேள்விகள் மற்றும் முக்கிய தீர்மானங்கள் இந்த நாளில் இடம் பெற்றன. மறைந்த முன்னோடிகளுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து முதல்வர் விஜய் மேகதாது விவகாரம் தொடர்பாக தனி தீர்மானத்தை முன்மொழிந்தார்.
மேகதாது அணைத்திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து அதனை முதல்வர் விஜய் முன்மொழிந்துள்ளார். அரசியலே மக்களுக்கானது என்பது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் என்றும் தனது தனி தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்து பேசினார். கொள்கை மற்றும் நிலைப்பாட்டில் வேறுபாடு இருக்கலாம் என்றும் ஆனால் மக்கள் பிரச்சனை என்றால் அனைத்துக் கட்சியையும் மக்கள் பக்கம் நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார். நீராதாரம் மக்களின் வாழ்வாதாரத்தில் ஒன்று என்றும் அதனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது எனவும் கூறினார்.
கட்சி வேறுபாட்டை ஒதுக்கி யாரும் யாரையும் குறைக்காமல் நாம் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். காவிரி நடுவர் மன்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காது படுகை மாநில இசைவை மாநில அரசை பெறாமல் தன்னிச்சையாக முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார். கர்நாடக அரசுக்கு தனது கடும் எதிர்ப்பை தமிழக சட்டப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் உள்ளிட்ட எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: சட்டசபை 2 ஆம் நாள் அமர்வு... மறைந்த முன்னோடிகளுக்கு மரியாதை... ஒருமனதாக தீர்மானங்கள்..!!
கர்நாடகா அரசின் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்திற்கு வலியுறுத்தினார். கர்நாடக அரசின் முயற்சியை முறியடித்து தமிழக விவசாயிகள் நலனை காத்திட பேரவை முழு ஆதரவை ஒருமனதாக தெரிவிக்கிறது என்றும் கூறியுள்ளார். காவிரிப் படுக்கையில் எந்த இடத்திலும் மற்ற எந்த இடத்திலும், மத்திய அரசின் ஒப்புதல் இன்றி அணைக் கட்டும் முயற்சி மேற்கொள்ளக்கூடாது எனவும் முதல்வர் விஜய் தெரிவித்து இருக்கிறார். மேலும் கர்நாடகா அரசுக்கு எதிரான தீர்மானத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: "‘அன்புச் சகோதரர்’..! ராகுல்காந்திக்கு CM விஜய் பிறந்தநாள் வாழ்த்து... அரசியலை தாண்டிய பாசப் பிணைப்பு..!!