அரசியல் வரலாற்றின் அத்தியாயம்... அண்ணா பிறந்த நாள் ... முதல்வர் விஜய் புகழாரம்.!
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் உருவாக்கி, ஏழை மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர் அண்ணா என முதல்வர் விஜய் புகழஞ்சலிபேரறிஞர் சி.என். அண்ணாதுரையின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் புகழாரம் வழங்கினார். அண்ணாவின் சமூக, அரசியல் பங்களிப்புகளை நினைவுகூர்ந்து உள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் உருவாக்கி, ஏழை மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர் அண்ணா” எனக் குறிப்பிட்டார்.முதலமைச்சர் விஜய் தனது செய்தியில் மேலும் கூறியதாவது:“சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கி, சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா.
மதராஸ் மாநிலம் என்ற பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றியதும், தமிழ்-ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியதும் அவரது தொலைநோக்குப் பார்வையின் சான்றாகும். ஏழை, எளிய மக்களின் குரலாக விளங்கி, சமூக நீதியை நிலைநாட்டிய அவரது பணிகள் என்றென்றும் நினைவுகூரப்படும்.
இதையும் படிங்க: நாங்க திமுக மாதிரி கிடையாது! தப்பு பண்ணினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்! அமைச்சர் விக்னேஷ் அதிரடி!
அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றி, மக்கள் நலன் காக்கும் ஆட்சியை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம். அவரது பிறந்தநாளில், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அவர் ஆற்றிய அரும்பணியைப் போற்றி மகிழ்கிறோம்.”இந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பாகப் பணியாற்றிய 180 காவல்துறை மற்றும் சீருடைப் பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இது அண்ணாவின் மரபைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் பின்பற்றப்படும் நடைமுறையாகும்.அண்ணாவின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு இறங்கிய பேரிடி... உச்சக்கட்ட அதிர்ச்சியில் திமுக...!