தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!
காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யை அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் அப்பாவு காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கலைஞர் கருணாநிதி மற்றும் பல்வேறு தமிழக அரசியல் தலைவர்களும் இருபத்தெட்டு ஆண்டுகால போராட்டத்தின் விளைவாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை பெற்றுத் தந்தனர் என்று சுட்டிக்காட்டி உள்ளார்.
குறித்த காலத்தில் காவிரி நீர் பெற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தும், அதனை மதிக்காமல் ஆணவத்தின் உச்சத்திற்குச் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னரே உச்சநீதிமன்றம் சென்று காவிரி நீரைப் பெறுவதற்குப் பதிலாக, தான்தோன்றித்தனமாக தானே கர்நாடக முதல்வரைச் சந்தித்து தண்ணீர் கொண்டு வருவேன் என்ற அகந்தையால் அவமானப்பட்டு, அதனுடன் தமிழகத்தையும் அவமானப்படுத்தியதாக அப்பாவு குறிப்பிட்டுள்ளார். மேலும் காவிரிப் படுகையில் தனது நண்பர் ஜனார்த்தன ரெட்டிக்கு மணல் எடுப்பதற்காக காவிரிப் படுகையையே காயவைத்துவிட்டாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!
நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் காவிரி நீர் மற்றும் மேகதாது தொடர்பான ஆக்கப்பூர்வமான எந்த விவாதமும் நடத்தாமல், ஆட்சியைத் தக்கவைக்க சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதிலேயே காலத்தைக் கடத்திவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்களின் சந்திப்பு காலம் தாழ்ந்ததாக இருந்தாலும், அது காவிரி நீர் பெறுவதற்கான சந்திப்பாக அல்லாமல், தனது நண்பரும், டெல்லி தமிழக அரசுப் பிரதிநிதியும், ஜனநாயகப் படத் தயாரிப்பாளரும், கர்நாடக முதல்வரின் நெருங்கிய நண்பருமான பெங்களூர் வெங்கட் நாராயணாவின் தொழில் சார்ந்த சந்திப்பாகவே இருந்திருக்கும் என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: 10 நாட்களில் 6 கொலைகள்... REELS MODEL அரசு..! விளாசிய நயினார் நாகேந்திரன்..!!