#BREAKING: MLA- களுக்கு கார்... பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை..! அறிவிப்புகளை அள்ளிவீசிய முதல்வர் விஜய்..!!
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தலைவர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளார். 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏழு புதிய செவிலியர்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார். பெரம்பூரில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 400 படுகைகளை கொண்ட பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு ஐந்து லட்ச ரூபாய் எழுந்து 25 லட்ச ரூபாயா உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். 351 கோடி ரூபாயில் செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். திருநங்கைகளுக்கான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை செய்து கூடுதலாக ஏழு மருத்துவமனைகளில் வழங்கப்படும் என்றார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தரமான மருத்துவ சேவை வைக்க தேவையான செவிலியர் மற்றும் மருத்துவவியல் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களை உருவாக்க கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "நாளைய PM நீங்க தான் தளபதி"..! பேரவையை அதிர வைத்த அமைச்சர் சரத்..! முதல்வர் விஜய்க்கு புகழாரம்..!!
மாதத்திற்கு 30 கோடியும் ஆண்டிற்கும் 360 கோடியும் செலவாகும் என்று தெரிவித்தார். வாகனத்திற்காக மாதம் தரும் 75 ஆயிரம் ரூபாய் வாகனப் படியாக வழங்கப்படும் என்று கூறினார். ஓர் உதவியாளரை நியமித்து கொள்ள மாதம்தோறும் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குத்தகையில் பேருந்து நடத்துனார்களா..? ரேபரேலி நிறுவனத்துக்கு தாரை வார்ப்பு..! TTV தினகரன் தாக்கு.!