#BREAKING சி.எம்.விஜய் போட்ட அதிரடி உத்தரவு... பனையூரில் இன்று அவசர அவசரமாக கூடும் தவெக எம்.எல்.ஏ.க்கள்...!
சென்னை பனையூரில் இன்று மாலை த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம்
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், இன்று மாலை த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணியளவில், கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை பனையூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், பட்ஜெட் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING உதயநிதிக்கு பேரதிர்ச்சி... காலையிலேயே அறிவாலயத்தில் இடியை இறக்கிய தவெக...!
நாளை தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாளை மறுநாள் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
எனவே, இந்த இரண்டு முக்கிய நிதிநிலை அறிக்கைகள் தொடர்பாக நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில், சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், எந்தெந்த அம்சங்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் இந்தக் கூட்டத்தில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: பொய் பிரச்சாரத்தின் உச்சம்..! நீட் போராட்ட வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசுதான்..! வதந்திகளுக்கு தவெக பதிலடி..!!