தாராபுரம் பிரசாரம்! ரூட் மாறுகிறது முதல்வர் விஜய் செல்லும் பாதை! கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அக்டோபர் 4-ம் தேதியுடன் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் பிரசாரம் நிறைவடைய உள்ளது.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நாளை அக்டோபர் 4-ம் தேதி கோவை வழியாக தாராபுரம் செல்ல உள்ளார். இதையொட்டி, அவரது பயணப் பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
விஜய் வழக்கமாக கோவை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோல்டுவின்ஸ், சின்னியம்பாளையம், நீலாம்பூர் வழியாக அவிநாசி சாலையை அடைந்து, அங்கிருந்து தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வது வழக்கம். ஆனால் நாளைய பயணத்துக்காக இந்த வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
புதிய பயணத் திட்டத்தின்படி, கோவை விமான நிலையத்தில் இருந்து சிட்ரா, காமராஜபுரம், சிங்காநல்லூர், ஒண்டிபுதூர் வழியாக விஜய் செல்ல உள்ளார். பின்னர் அங்கிருந்து பைபாஸ் சாலையை அடைந்து தாராபுரம் நோக்கி பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் விஜய் செல்லும் பாதையில் உள்ள முக்கிய நகரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: SIR விவகாரம்! அக்டோபர் 15-ல் சென்னையில் இந்தியா கூட்டணி மெகா போராட்டம்! முதல்வர் விஜய்க்கும் அழைப்பு?!
குறிப்பாக, மாற்றப்பட்டுள்ள இந்தப் பாதையில் சில இடங்களில் சாலைகள் குறுகலாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், நாளை விடுமுறை நாள் என்பதால் விஜயை வரவேற்கவும், அவரைப் பார்க்கவும் அதிக அளவில் பொதுமக்கள் திரள வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் கணித்துள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு பணிகளில் சுமார் 2,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அக்டோபர் 4-ம் தேதியுடன் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் பிரசாரம் நிறைவடைய உள்ளது.
இந்த சூழலில் விஜயின் நாளைய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கோவை நகருக்குள் மாற்றப்பட்டுள்ள புதிய வழித்தடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளால், அவர் செல்லும் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் மக்கள் கூட்டத்தை காவல்துறையினர் கண்காணிக்க உள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளில் நடைபெற உள்ள இந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு தோல்வி பயம்!! தவெக ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை! நயினார் நாகேந்திரன் விமர்சனம்!