தென் மாநிலங்களுக்கு ஆபத்து... சட்டப்பேரவையில் கர்ஜித்த சி.எம்.விஜய்... தொகுதி மறுவரையறைக்கு கடும் எதிர்ப்பு...!
தொகுதி மறுவரையால் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும், அதைச் சரிசெய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொகுதி மறுவரையறை தொடர்பான தனி தீர்மானம் மீதான முதலமைச்சர் விஜய் உரையாற்றியானார். அவர் பேசியதாவது: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தொகுதி மறுவரை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் தமிழ்நாடு அரசால் நமது தலைமையில் 08.08.2026 அன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் என ஆறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரை தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனையில், தொகுதி மறுவரையால் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும், அதைச் சரிசெய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இறுதியில்,தொகுதி மறுவரை தொடர்பாக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் இயற்றலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு குட்பை... தவெகவில் ஐக்கியம்! முதல்வர் விஜய் முன்னிலையில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்!
இந்தியாவில் 1952ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மறுசீரமைப்பு செய்யப்பட்டு, 1976ஆம் ஆண்டு வரை தேர்தல்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், 1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, மக்கள் தொகையைக் சிறப்பாகக் கட்டுப்படுத்தும் மாநிலங்களுக்கு டிலிமிடேஷன் காரணமாக மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அடுத்த 25 ஆண்டுகளுக்கு 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்கும் என்று சட்டம் இயற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அதே நிலையை முன்னிறுத்தி 84வது மற்றும் 87வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களின் மூலம் 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை நிலைநிறுத்தப்பட்டது.
இந்தத் திருத்தங்களின் நோக்கமே, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான்.
அந்த 25 ஆண்டு கால வரம்பு இந்த 2026ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. இதை முன்னிட்டு, கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வந்த டிலிமிடேஷன் தடையை அகற்றி, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா ஏப்ரல் 2026ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அந்த மசோதா தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
இப்போது மீண்டும் ஒன்றிய அரசு மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரித்து டிலிமிடேஷன் மசோதாவை அறிமுகப்படுத்த உத்தேசித்து இருப்பதாக சில அரசியல் கட்சிகள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வரவிருக்கும் மசோதா குறித்து 08.08.2026 அன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, மேலே குறிப்பிட்டதைப் போன்று, தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள மசோதா நிறைவேறினால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தலா 50 சதவீதம் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை முதலில் அதிகரித்தாலும், அதனைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 81(2A)-ன் கீழ் மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் இவ்வாறு செய்யப்பட்டால், தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!