×
 

நீங்க அத கவனீச்சீங்களா?! அமித்ஷாவுக்கு முதல்வர் விஜய் கொடுத்த கிஃப்ட்! மூடிய பையில் கொடுத்த பரிசு என்ன?

இந்த சந்திப்பின்போது விஜய், மூடிய பை ஒன்றில் வைத்து அமித் ஷாவிடம் பரிசு ஒன்றை வழங்கிய காட்சி தற்போது பேசுபொருளாகியுள்ளது.

தென்மாநிலங்களின் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்படும் தெற்கு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இதற்கிடையே, கூட்டத்திற்கு முன்னதாக முதலமைச்சர் விஜய், அமித் ஷாவை சந்தித்து வழங்கிய மர்மப் பரிசு குறித்த தகவல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விஜய் நேரில் சந்தித்தார். சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அமித் ஷாவை நேற்று இரவு சந்தித்த விஜய், அவருக்கு பொன்னாடை மற்றும் மலர் கூடை வழங்கி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடியதுடன், இரவு உணவிலும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது விஜய், மூடிய பை ஒன்றில் வைத்து அமித் ஷாவிடம் பரிசு ஒன்றை வழங்கிய காட்சி தற்போது பேசுபொருளாகியுள்ளது. அந்தப் பைக்குள் என்ன இருந்தது என்பது குறித்து இரு தரப்பிலும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனால், பரிசு என்னவாக இருக்கும் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: சுதந்திர தின அணிவகுப்பில் மயங்கி விழுந்த போலீஸ் தர்மராஜ் உயிரிழப்பு! ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!

சிலர் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொருள் அல்லது நினைவுப் பரிசாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர், அமித் ஷாவுக்கு பிடித்த உணவுப் பொருள் அல்லது சிறப்பு பரிசாக இருக்கலாம் என யூகங்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இவை அனைத்தும் தற்போது உறுதி செய்யப்படாத தகவல்கள் மட்டுமே. உண்மையில் அந்தப் பையில் என்ன இருந்தது என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும் வரை, சமூக வலைதளங்களில் வெளியாகும் யூகங்களை உறுதி செய்யப்பட்ட செய்தியாக கருத முடியாது.

இதனிடையே நடைபெற்று வரும் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கிடையேயான பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. குறிப்பாக காவிரி நீர் பங்கீடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான விவகாரங்கள் தொடர்பாகவும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது, நிர்வாகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களும் கூட்டத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்திற்கு மத்தியில், அமித் ஷாவுக்கு விஜய் வழங்கிய பரிசு குறித்த கேள்வி தற்போது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share