அமித் ஷாவை நேரில் சந்தித்த சி.எம்.விஜய்... 30 நிமிடம் பேசியது என்ன?... வெளியானது முக்கிய தகவல்...!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று இரவு தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முக்கியமாக இன்று நடைபெற்று வரும் 31வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்திருந்தார்.
நேற்று இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு, பாஜக மாநிலத் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர், கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு அமித்ஷா சென்றார்.
இந்த நிலையில், நேற்று இரவு தமிழக முதலமைச்சர் விஜயும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.
இதையும் படிங்க: “பத்தல... பத்தல...” - சி.எம்.விஜய் அறிவிப்பால் பால் உற்பத்தியாளர்கள் கடும் அப்செட்... எதிர்பார்ப்பு என்ன?
இந்தச் சந்திப்பு சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் நடைபெற்றதாகத் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக, அமித்ஷாவை வரவேற்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய், அவர் வருவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே இந்த விடுதிக்கு வந்துள்ளார். அதாவது, இரவு 10 மணிக்கே அவர் விடுதிக்கு வந்து, அமித்ஷாவை வரவேற்பதற்காக காத்திருந்துள்ளார்.
அதன்பிறகு, இரவு 10.30 மணியளவில் அமித்ஷா வந்தவுடன், அவருக்கு பூங்கொத்து கொடுத்து தமிழக முதலமைச்சர் விஜய் வரவேற்றார். தொடர்ந்து, இருவருக்கும் இடையே சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் தனிப்பட்ட சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் பேசியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது ஒரு முக்கிய அரசியல் நகர்வாகவும் இருக்கக்கூடும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
ஏற்கனவே தமிழக முதலமைச்சர் விஜய் டெல்லி சென்று, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தார். அந்தச் சந்திப்புகள் மரியாதை நிமித்தமான சந்திப்புகளாக அமைந்திருந்தன. இருப்பினும், அப்போது அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவில்லை.
இந்த நிலையில், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நேற்று அமித்ஷாவை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார். இன்று தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ள சூழலில், அதற்கு முந்தைய நாளான நேற்று இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அமித்ஷாவின் வருகைக்காக தமிழக முதலமைச்சர் சுமார் 30 நிமிடங்கள் விடுதியில் காத்திருந்ததும், அதன் பின்னர் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு இருவருக்கும் இடையே 30 முதல் 40 நிமிடங்கள் நேரடியாக சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் பேசியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பின் போது, நீட் விவகாரம், தமிழகத்திற்கு தேவையான நிதியைப் பெறுவது உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக சி.எம்.விஜய் பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல், காவிரி நதிநீர் பிரச்சினையும் முக்கியமானதாக உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ள நிலையில், அந்த உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் சி.எம்.விஜய் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எடக்கு முடக்கா கேள்வி கேட்க வெக்குறீங்க..! நாங்க ஏன் பயப்படனும்..? அமைச்சர் ஆனந்த் கேள்வி.!!