பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!
சென்னை தலைமை செயலக்கத்தில் முதலமைச்சர் விஜய் அமைச்சர்களோடு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக முதலமைச்சர் விஜய் தற்போது தனது அமைச்சரவையில் உள்ள ஒன்பது அமைச்சர்களையும் அழைத்து ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை ஒன்பது அமைச்சர்களுக்கும் அவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டது. துறைகள் ஒதுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அமைச்சர்கள் அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் அறையிலே இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
முதலில் வாழ்த்துக்களும் அதனை தொடர்ந்து இந்த அரசினுடைய எதிர்பார்ப்பு என்ன?, ஒவ்வொருவரும் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கக்கூடிய துறைகளில் எப்படி செயல்பட வேண்டும் என அரசு நினைக்கிறது என்பதை முதலமைச்சர் விளக்குவார் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடரும் நடைபெற இருக்கின்றது. எனவே பட்ஜெட்டுக்கு தேவையான முக்கியமான அறிவிப்புகள்?, ஏற்கனவே முந்தைய அரசு அறிவித்து நடைமுறையிலே செயல்பாட்டுக்கு வராத விஷயங்கள் இருந்தால் அவற்றை ஆய்ந்து அறிந்து கொண்டு வந்து அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முதலமைச்சர் அறிவுறுத்த இருப்பதாக தெரிகின்றது.
இதற்கு முன்பு இரண்டு முறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றிருந்தாலும் கூட துறைகள் ஒதுக்கிய பிறகு நடைபெறக்கூடிய ஆலோசனை கூட்டம் என்பதால் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சருடனான இந்த கூட்டத்திற்கு பிறகு ஒவ்வொரு அமைச்சரும் தங்களுடைய அறைகளுக்கு சென்று அங்கு தங்களுடைய துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஈழத் தமிழர்கள் பத்தி பேசுங்க விஜய்..! தமிழக முதல்வருக்கு இலங்கை எம்.பி. அர்ச்சுனா வலியுறுத்தல்..!
அந்த துறையிலே மொத்தம் இருக்கக்கூடிய விஷயங்கள் என்ன? நிதி போக்குவரத்து என்னவாக இருக்கின்றது? கடந்த காலங்களிலே அறிவிக்கப்பட்டு இன்னும் செயல்பாட்டுக்கே வராமல் இருக்கக்கூடிய திட்டங்கள் என்ன? அதனை மீண்டும் செயல்படுத்த சாத்திய கூறுகள் இருக்கிறதா இல்லையா? புதிதாக செய்யப்பட வேண்டிய திட்டங்கள் என்ன? குறிப்பாக தமிழக வெற்றி கழகம் அறிவித்திருக்கக்கூடிய வாக்குறுதிகளில் எந்த திட்டத்தை அந்த துறை ரீதியாக செயல்படுத்த முடியும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சம்பந்தமாக அவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே அதற்கு முன்னோட்டமாக தற்போது முதலமைச்சர் சுமார் அரை மணி நேரமாக அந்த அமைச்சர்களுடன் அதாவது துறை ஒதுக்கப்பட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி அதிரடி! வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்களின் பதவிகள் பறிப்பு!