விடிந்ததுமே திருமாவுக்கு சி.எம். விஜய், மு.க.ஸ்டாலின் கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்... செம்ம ஹேப்பியான சிறுத்தைகள்...!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்.
இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனுடைய பிறந்தநாளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துப் பதிவில், “சமூக நீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும். தாங்கள் நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவனுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்” என்றும் இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: #BREAKING கர்நாடகாவில் 3 தமிழர் சுட்டுக்கொலை... வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு... FIR-ல் முக்கிய ட்விஸ்ட்...!
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து பதிவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட விழைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING செந்தில் பாலாஜிக்கு கிடுக்குப்பிடி... டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சகோதரருக்கு லுக்அவுட் நோட்டீஸ்...!