×
 

முதல்வர் விஜய் ஆய்வுக்கு இதெல்லாம் முக்கியம்! சின்ன தப்பு கூட நடக்கக்கூடாது! துறை செயலர்களுக்கு உத்தரவு!

ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கவுள்ள முதல்வர் விஜய்க்கு விளக்க வசதியாக, துறை வாரியாக தலா, 20 'ஸ்லைடு' புகைப்பட காட்சிகளை தயாரிக்க, துறை செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட்டுக்கு முன்னதாக, துறை வாரியாக ஆய்வு கூட்டங்கள் நடத்த முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு துறைக்கும் 20 ஸ்லைடுகளுக்கு மிகாமல் விளக்கப் புகைப்பட காட்சிகளை தயாரிக்க துறை செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஜூலை 2 முதல் 22 வரை துறை வாரியாக ஆய்வு கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு துறை மற்றும் மாலையில் மற்றொரு துறை என ஆலோசனை கூட்டங்கள் நடக்கும். முதல் நாளில் கூட்டுறவு, உணவு மற்றும் வருவாய் துறைகளும், அடுத்த நாள் ஊரக வளர்ச்சி மற்றும் நெடுஞ்சாலை துறைகளும் ஆய்வுக்கு வர உள்ளன.

தலைமை செயலர் அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், ஒவ்வொரு துறையும் தங்கள் செயல்பாடுகளை உள்ளடக்கிய சுருக்கமான 20 ஸ்லைடு விளக்கக் காட்சியை தயாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் துறையின் தற்போதைய நிலை, கடந்த ஒரு ஆண்டு செயல்பாடுகள், மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு திட்டங்கள், எதிர்கால பரிந்துரைகள் ஆகியவை இடம்பெற வேண்டும். 

இதையும் படிங்க: அசெம்பிளில கவனிச்சிக்குறேன்! உதயநிதி ஸ்டாலின் ஸ்கெட்ச்! சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய்க்கு காத்திருக்கும் நெருக்கடி!

மேலும், துறையின் சவால்கள், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் சேவை வழங்கல் மேம்பாட்டுக்கான யோசனைகளும் இந்த விளக்கத்தில் இடம்பெற வேண்டும். நிதி சார்ந்த பரிந்துரைகள் இருந்தால், நிதித்துறை செயலருடன் விவாதித்த பிறகு முன்வைக்க வேண்டும். இந்த ஸ்லைடு காட்சிகளை தலைமை செயலரின் ஒப்புதலுடன் ஆய்வு கூட்டத்துக்கு குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்பாக முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு கூட்டங்கள் மூலம் ஒவ்வொரு துறையின் செயல்பாடுகளையும் முதல்வர் விஜய் நேரடியாக புரிந்துகொள்ளவும், பட்ஜெட்டில் தேவையான முன்னுரிமைகளை நிர்ணயிக்கவும் வாய்ப்பு கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல் மற்றும் மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு முன்னதாக நடைபெறும் இந்த ஆய்வுகள், த.வெ.க. அரசின் செயல்பாடுகளுக்கு திசை வழி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரிகள் தரப்பில் தீவிரமான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் முதல்வர் விஜய்!! மேகதாது அணை விவகாரம்! தவெக புது ரூட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share