×
 

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி!! அதிரடியாய் குவிந்த ஆதரவு! முடக்கப்பட்டது எக்ஸ் தளம்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டதாக கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். இது எதிர்பார்த்தது தான் என அவர் தனது எக்ஸ் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி சூரிய காந்த் (Surya Kant) தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து உருவான “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. இளைஞர்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு எதிர்ப்பாக தொடங்கப்பட்ட இந்த நையாண்டி அரசியல் இயக்கம் குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு வழக்கு விசாரணையின் போது, “சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளைப் போல பல அமைப்புகளில் ஊடுருவி சமூக வலைதள போராளிகளாக மாறுகின்றனர்” என்று சூர்யகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. பின்னர் விளக்கம் அளித்த அவர், “போலி சான்றிதழ் மூலம் அமைப்புகளுக்குள் நுழையும் சிலரை மட்டுமே குறிப்பிட்டேன்” என்று தெரிவித்தார்.

ஆனால், ஏற்கனவே வேலைவாய்ப்பு பற்றாக்குறை, போட்டித் தேர்வு முறைகேடுகள், நீட் வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சனைகளால் அதிருப்தியில் இருந்த இளைஞர்கள் மத்தியில் இந்த கருத்து மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில்தான் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி “Cockroach Janata Party” அல்லது CJP என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கம் உருவானது.

இதையும் படிங்க: விஜயை வீழ்த்த இதுதான் ஒரேவழி!! திமுக, அதிமுக புதிய திட்டம்! தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணி!

இந்த இயக்கத்தை அபிஜீத் தீப்கே (Abhijeet Deepke) கடந்த மே 16ஆம் தேதி தொடங்கியதாக கூறப்படுகிறது. தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் இதில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகின. “இளைஞர்களின் குரலை வெளிப்படுத்தும் இயக்கம்” என்ற அடிப்படையில் இந்த கட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பிரபலமடைந்தது.

இதற்கிடையில், CJP-யின் எக்ஸ் பக்கம் திடீரென முடக்கப்பட்டதாக அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். இது எதிர்பார்த்ததுதான் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். முடக்கப்படுவதற்கு முன்பு அந்த பக்கத்தை 1.65 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இன்ஸ்டாகிராமில் இந்த இயக்கம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் தற்போது 1.26 கோடி பாலோயர்களை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாஜக (Bharatiya Janata Party) யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை விட அதிகம் என்பதும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: விஜய்யின் தவெகவுக்கு தாவும் பாஜக இளைஞர்கள்! கட்சியை காக்க மீண்டும் தலைமை ஏற்கிறார் அண்ணாமலை?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share