×
 

திமுக கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது! சாமானியர்களுக்கு இடமில்லை! கவுன்சிலர் பாபு குற்றச்சாட்டு!

கோவை மாநகராட்சி 22ம் வார்டு திமுக கவுன்சிலர் பாபு, கட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் எளியவர்கள் உயர் பதவிக்கு வர முடியாத நிலை இருப்பதாக, தலைமைக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

கோவை மாநகராட்சி 22-வது வார்டு திமுக கவுன்சிலர் பாபு, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து கட்சித் தலைமைக்கு எழுதியுள்ள கடிதத்தில், திமுகவில் எளிய பின்னணியில் உள்ளவர்களுக்கு உயர்ந்த பதவிகளில் முன்னேறும் வாய்ப்பு இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தனது கடிதத்தில், இளைஞர்களுக்கும் சாமானிய தொண்டர்களுக்கும் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று கூறியுள்ள பாபு, இந்த நிலைமையில் தொடர்ந்து திமுகவில் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், தன்னுடன் தனது நண்பர்களும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், திமுக இனி சாமானியர்களின் அரசியல் இயக்கமாக இல்லை என்றும், அது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போல செயல்படுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். சாதாரண தொண்டர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குகளை திரட்டும் பணியில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள்; ஆனால் உண்மையாக மக்கள் சேவை செய்யும் பொறுப்புகள் அல்லது உயர்ந்த பதவிகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: கூட்டணி முறிவு எதிரொலி..! பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களுக்கு தனி இடம்..! MP கனிமொழி கோரிக்கை ஏற்பு..!!

கட்சித் தலைமை சாதாரண தொண்டர்களுக்கு எட்டாத உயரத்தில் இருப்பதாகவும், எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எந்த சூழலிலும் முக்கிய பொறுப்புகளுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாபு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி இருப்பதையும், மூத்த தலைவர்கள் அவருக்குப் பின்னால் நிற்பதையும் சுட்டிக்காட்டிய அவர், இது சமூகநீதிக் கொள்கைக்கு ஏற்புடையதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

திமுக மன்னராட்சி போன்று செயல்படுவதாகவும், முதலாளித்துவ அரசியல் அமைப்பாக மாறிவிட்டதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் சாமானியர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில் பதவி வகித்து வந்த கவுன்சிலரின் இந்த திடீர் விலகல் மற்றும் கடுமையான விமர்சனங்கள், மாவட்ட அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக தலைமையிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: தமிழ்த் தாயின் ஏக்கம் தீர்த்த தலைமகன்..! திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு நாள் வாழ்த்து..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share