×
 

இபிஎஸ் பரப்புரை நடந்த இடத்தில் பயங்கர விபத்து... கல்லூரி பேராசிரியர் பலி..!

எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை நடைபெற்ற இடத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி விரிவுரையாளர் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமங்கலம் விலக்கு பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் எழுச்சி பயண பரப்புரை நடைபெற்றது.

இந்த பரப்புரைக்காக மதுரை, தேனி நான்கு வழிச்சாலையில் ஒரு பகுதியில் மட்டுமே வாகனங்கள் ஊர்ந்து சென்றனர். இதில் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வரும் ராமச்சந்திரன் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டி வந்து கொண்டிருந்த போது, பரப்புரை நடைபெற்ற இடத்தில் எதிரே வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் விரிவுரையாளர் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கார் மீது பைக் மோதி கோர விபத்து... கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் துடிதுடித்து பலி...!

இதே போல் கூட்டத்திற்குள் இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் கூட்டத்தில் நின்றிருந்த வண்டாரியைச் சேர்ந்த சங்கரம்மாள் மற்றும் ஆதிமூர்த்தி படுகாயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: #BREAKING: விஜய் மாநாட்டின் 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து… அப்பளம் போல் நொறுங்கிய கார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share