இன்று தொடங்கவிருந்த வகுப்புகள்... தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை... !
அந்தியூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு (16 வயது ) மாணவர் தூக்கிட்டு தற்கொலை. இன்று வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் இன்று தூக்கிட்டு இறந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சரண் ஆதித்யா, பத்தாம் வகுப்பு இந்த ஆண்டு முடித்த நிலையில் சரண் ஆதித்யாவின் பெற்றோர்கள் இவரை ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல், சக்தி நகர் பகுதியில் செயல்படும் தனியார் (சக்தி) பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்ஸ்ட்ருமெண்டேஷன் பிரிவில் சேர்த்து உள்ளனர்.
இதற்காக சரண் ஆதித்யாவை கல்லூரி விடுதியில் தங்கி பயில பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் கல்லூரி வகுப்பு நாளை தொடங்க உள்ள நிலையில் நேற்று ஊரில் இருந்து சரண் ஆதித்யா கல்லூரி விடுதிக்கு வந்து தங்கியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING ஆணவக்கொலையா?... மயிலாடுதுறையில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை... !
நேற்று மாலை கல்லூரி விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் சரண் ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அறிந்த கல்லூரி மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர் தொடர்ந்து அவர்கள் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார் சரண் ஆதித்யாவின் உடலை பார்வையிட்டனர், அப்போது சரண் ஆதித்யாவின் கையில் கண்ணாடியால் கிழித்த ரத்த காயமும் இருந்துள்ளது, தொடர்ந்து போலீசார் சரண் ஆதித்யாவின் உடலை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி வகுப்பு இன்ரு தொடங்க உள்ள நிலையில் முதலாம் ஆண்டு மாணவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!