சாலையில் படுத்து உருண்ட கம்யூனிஸ்ட்கள்... குண்டு கட்டாய் தூக்கிய விஜய் போலீஸ்...!
நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2026ஆம் ஆண்டுக்கான தேர்தல் காலகட்டத்தில், தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையை அறிமுகப்படுத்தியது. இதற்கு அப்போது பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. இருப்பினும், எதிர்ப்புகளையும் மீறி தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணிகளை நிறைவு செய்தது.
இதனைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ஞானேஷ் குமார் மீது, அவருடன் பணியாற்றிய இணைத் தேர்தல் ஆணையர்கள் புகார் அளித்ததாகக் கூறப்படும் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் சிஜேபி அமைப்பினர் காலையிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இடதுசாரிக் கட்சிகளின் சார்பிலும் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பலரை பாஜக அரசு கைது செய்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடா.? நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்.? வேல்முருகன் கேள்வி.!!
இந்தக் கைதுகளைக் கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சியினரும் அகில இந்திய மாணவர் அமைப்பினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்ததற்கும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தங்களது உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டால் மீண்டும் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.
இதனால், நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்களைக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின்போது 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒரு சிறுமியும் நான்கு பெண்களும் அடங்குவர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலும் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக.. கனிமொழி எம்பி விமர்சனம்..! போராடும் இளைஞர்களை கைது செய்வதாக காட்டம்..!