தளபதிக்கு அடுத்தடுத்து சிக்கல்... விஜயால் என் வீட்டில் நிம்மதி போச்சி... காவல் ஆணையரிடம் விசிக நிர்வாகி புகார்...!
தனது குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்க காரணமான தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி விசிக நிர்வாகி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலை சந்தித்துள்ளது. 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து தான் களம் கண்டது. அனைத்து மாவட்டங்களையும் கவர் செய்ய முடியவில்லை என்றாலும், சென்னை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை மட்டுமில்லாமல், ரோடு ஷோவும் விஜய் நடத்தினார். பரப்புரை கூட்டத்தில் விஜய் உரையாற்றவும் செய்தார்.
அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 21 ஆம் தேதி சென்னையில் நடந்த இறுதி கட்ட பரப்புரையின் போது "விஜய் மாமாவிற்கு" உங்களுடைய பெற்றோரிடம் அடம் பிடித்து விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வையுங்கள் என கோரிக்கை வைத்தார். அதாவது “ குட்டீஸ்களே, உங்களுக்கு ஒரு சாக்லேட்டோ அல்லது பொம்மையோ வேணும்னா அடம்பிடிச்சு வாங்குவீங்கல்ல? அதே மாதிரி, இந்த 'விஜய் மாமா' ஜெயிக்கணும்னு உங்க வீட்டுப் பெரியவங்ககிட்ட அடம்பிடிச்சு நம்ம விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைங்க," என பேசியிருந்தார்.
இந்த நிலையில் விஜய் வைத்த கோரிக்கையின் காரணமாக தன்னுடைய ஐந்து வயது மகன் "விஜய்யின் விசில் சின்னத்திற்கு" வாக்களிக்க அடம் பிடித்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்க காரணமான விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையை சேர்த்த விசிக நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் மாமாக்கு ஓட்டு போட சொல்லுங்க..! குழந்தைகளிடம் வாக்கு கேட்டதாக போலீசில் புகார்..!
இது குறித்து பேசிய பாலகிருஷ்ணன் கூறும் போது : வாக்கு செலுத்த சென்ற போது விசில் சின்னத்தில் வாக்களிக்க அடம் பிடித்தான். மேலும் என்னுடைய குழந்தையும் உளவியல் ரீதியாக பாதிப்படைந்துள்ளது. என் குடும்பம் மட்டும் இல்லாமல் என்னுடைய நண்பர்கள் குடும்பத்தினரும் இதுபோன்று பாதிப்படைந்துள்ளனர். உளவியல் ரீதியாகயான பாதிப்பை ஏற்படுத்த காரணமான விஜய் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வியப்பா இருக்கு..! ஏளனமா பேசுனவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டீங்க...! நன்றி கூறிய விஜய்..!!