இந்தியா- பாக், விவகாரம்... 'லட்சுமண ரேகை'யைக் கடந்தாரா சசிதரூர்..? காங்கிரஸ் கடும் விமர்சனம்..!
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து மீண்டும் மீண்டும் கருத்து தெரிவிப்பதன் மூலம் சசி தரூர் கட்சியின் 'லட்சுமண ரேகை'யைக் கடந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி விரக்தி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ஆபரேஷன் சிந்தூர், போர் நிறுத்தம் குறித்த தனது கருத்துக்களால் பரபரப்பாக பேசாப்பட்டு வருகிறார். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரைப் பாராட்டிய தரூர், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்களைப் பாராட்டினார்.
அத்தோடு, போர்நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய அறிவிப்பையும் தரூர் கடுமையாக எதிர்த்தார்.
சசி தரூர் தனது எக்ஸ்தளப்பதிவில் டிரம்பின் போர்நிறுத்தம் குறித்த பேச்சைக் கேள்வி எழுப்பியுள்ளார். மறுபுறம், ஜனாதிபதி டிரம்ப் கூறிய போர் நிறுத்த கருத்தால் காங்கிரஸ் கட்சி, பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கிடையே, டிரம்ப் குறித்து சசி தரூர் வெளியிட்ட கருத்துகளில் இருந்து காங்கிரஸ் விலகி நிற்கிறது.
இதையும் படிங்க: பீகாரில் உடையும் காங்கிரஸ்..! ராகுல் பயணத்துக்கு முன்பே.. பாஜகவில் இணையும் 17 முக்கியப்புள்ளிகள்..!
காங்கிரஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சசி தரூரின் கருத்துக்கள் குறித்து ஜெய்ராம் ரமேஷிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, அவர், ‘‘இது அவருடைய கருத்து, தரூர் பேசியது கட்சியின் கருத்து அல்ல’’ எனத் தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து மீண்டும் மீண்டும் கருத்து தெரிவிப்பதன் மூலம் சசி தரூர் கட்சியின் 'லட்சுமண ரேகை'யைக் கடந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி விரக்தி தெரிவித்துள்ளது.
தரூர், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், பிரியங்கா காந்தி வத்ரா, சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் கூட்டத்திற்குப் பிறகு, யார் பெயரையும் குறிப்பிடாமல் ‘‘இது தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான நேரம் அல்ல, கட்சியின் நிலைப்பாட்டை உயர்த்துவதற்கான நேரம்’’ எனத் தெரிவித்தனர்.
சசி தரூர் தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘டிரம்பின் நடவடிக்கைகள் இந்தியாவிற்கு நான்கு வழிகளில் ஏமாற்றத்தை அளிக்கிறது. முதலாவதாக, பாதிக்கப்பட்டவருக்கும், குற்றவாளிக்கும் இடையிலான தவறான சமத்துவத்தைக் குறிக்கிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துடனான பாகிஸ்தானின் உறவுகளுக்கு எதிரான அமெரிக்காவின் முந்தைய உறுதியான நிலைப்பாட்டை புறக்கணிக்கிறது.
இரண்டாவதாக, இது பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு திட்டத்தை ஏற்படுத்த்கிறது. இந்தியா ஒருபோதும் தனது தலையில் பயங்கரவாத துப்பாக்கியை நீட்டி பேச்சுவார்த்தை நடத்தாது. மூன்றாவதாக, அது காஷ்மீர் சர்ச்சையை "சர்வதேசமயமாக்குகிறது". இது பயங்கரவாதிகளின் தெளிவான நோக்கமாகும். இந்தியா உலகநாடுகளை நிராகரித்து, இந்தப் பிரச்சினையை இந்தியாவின் உள்நாட்டு விஷயமாகக் கருதுகிறது. பாகிஸ்தானுடனான தனது பிரச்சினைகளில் இந்தியா எந்த வெளிநாட்டினரிடமும் மத்தியஸ்தம் செய்வதாக கூறியுள்ளது. நான்காவதாக, இது உலகக் கற்பனையில் இந்தியாவையும், பாகிஸ்தானையும் மீண்டும் இணைக்கிறது’’ என்று தெரிவித்து இருந்தார்.
சசி தரூரின் 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றிய கருத்துக்காக அவர், டிரம்ப் 'லக்ஷ்மண ரேகையை கடந்து செல்கிறார்' என்று கூறியதற்காகவும் காங்கிரஸ் கட்சி அவரை கடுமையாக விமர்சித்த் வருகிறது. இது குறித்து பாஜக தலைவர் நளின் கோஹ்லி கூறுகையில், "சசி தரூரின் கருத்துக்கள் மோடிக்கு ஆதரவாக இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததா அமெரிக்கா.? மோடி சர்க்காருக்கு ஆதரவாக பேசும் சசி தரூர்!