ஆட்சியில் பங்கு..! காங்கிரஸ் மீண்டும் கலககுரல்..! திமுகவுக்கு காத்திருக்கும் ஷாக்..!
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சி மீண்டும் முன்னெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான ஆளும் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு கோரி தொடர்ந்து குரல் எழுப்பி வருவது, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏற்பட்ட அரசியல் பதற்றத்தின் ஒரு முக்கிய அம்சமாக உருவெடுத்தது. இந்தக் கோரிக்கை நீண்டகால கூட்டணி உறவில் புதிய விரிசலை ஏற்படுத்தியதாகவும், இரு கட்சிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளை சிக்கலாக்கியதாகவும் அமைந்தது.2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த முறை 2026 தேர்தலுக்கு முன்னதாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது, காங்கிரஸ் தரப்பில் அதிக இடங்கள் மட்டுமின்றி, தேர்தலுக்குப் பிறகு ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் இந்தக் குரலை தீவிரமாக முன்வைத்தனர். மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்டக் கூட்டங்களில் கூடுதல் தொகுதிகள், உள்ளாட்சித் தேர்தல்களில் 30 சதவீத பங்கு மற்றும் ஆட்சியில் பங்கு என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது கூட்டணிக்குள் பொதுவான விவாதத்தைத் தூண்டியது.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தக் கோரிக்கைக்கு தெளிவான எதிர்ப்பைத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மாதிரி ஒத்துவராது என்றும், தி.மு.க. தனித்து அல்லது தலைமையில் ஆட்சி அமைக்கும் நிலையில் அதிகாரப் பகிர்வு தேவையில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நிலையில் காங்கிரஸ் தரப்பில் மீண்டும் ஆட்சியில் பங்கு என்ற கலககுரல் எழுந்து உள்ளது. ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை மீண்டும் காங்கிரஸ் எழுப்பி உள்ளது. தமிழக அரசியலில் இனி ஒருபோதும் நடுநிலை வகிக்க முடியாது என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் முடிந்ததும் பதவி விலகும் செல்வப் பெருந்தகை..! அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்..?
தேர்தலில் வெற்றி பெற்றதும் எங்களுக்கான உரிமையை கேட்டு பெறுவோம் எனவும் கிரிஷ் தெரிவித்துள்ளார். எங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறினார். கட்சியை வலுப்படுத்த எங்களது உரிமையை கேட்டு பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு என்பதை எதிர்த்த முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ் தரப்பில் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை எழுந்திருப்பது திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதையும் படிங்க: வருமான வரி சோதனை..! ஆதாரங்களை வெளியிட்ட செல்வப் பெருந்தகை..!