சசிதரூருக்கு ஆதரவாக பேசியதால் சந்திக்க மறுக்கும் சோனியா குடும்பம்! மணி சங்கர் ஐயர் புகார்!
காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யருக்கும், காங்கிரஸ் எம்பி சசி தரூருக்கு இடையே பொதுவெளியில் கருத்து மோதல் வெடித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யருக்கும், காங்கிரஸ் எம்பி சசி தரூருக்கும் இடையே பொதுவெளியில் கடும் கருத்து மோதல் வெடித்துள்ளது. ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் சசி தரூர் ஆற்றிய கருத்துக்களை விமர்சித்து மணி சங்கர் அய்யர் எழுதிய கடிதத்துடன் இந்த மோதல் தொடங்கியது. இருவரும் தொடர்ந்து கடிதங்கள் மூலம் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
மணி சங்கர் அய்யர் தனது கடிதத்தில், "காங்கிரஸ் தலைவர் தேர்தலில் உங்களுக்கு ஓட்டு போட்டேன். தோல்வியடைந்தாலும் கார்கேவிடம் உங்களுக்கு கௌரவமான பதவி கொடுக்க வேண்டும் என்று வாதிட்டேன். உங்கள் திறமையை கட்சி பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அதன் விளைவாக சோனியா குடும்பமும், கார்கேவும் என்னை சந்திக்க மறுக்கின்றனர். இப்போது அந்த ஆதரவுக்கு வருந்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "அமெரிக்காவை விமர்சிப்பதில் எச்சரிக்கையாக இருக்கிறீர்கள் என்று ஜெய்சங்கர் பற்றி கூறுவதில் உடன்பாடில்லை. பாராளுமன்ற வெளியுறவு குழு தலைவராக இருந்து கொண்டு வெளியுறவுக் கொள்கை குறித்து தெளிவான நிலைப்பாடு தெரிவிக்காமல் இருப்பது உங்கள் பதவியை குறைமதிப்பிற்கு உள்ளாக்குகிறது.
இதையும் படிங்க: விட்டுக்கொடுத்துருங்க ராகுல்!! மம்தாதான் தலைவருக்கு கரெட்டு! ஓபனாக பேசிய மணி சங்கர் அய்யர்! ஸ்டாலினுக்கும் சப்போர்ட்!!
சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு உங்கள் சித்தாந்தத்தை சந்தேகத்துக்கு உள்ளாக்கியது" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கு உடனடியாக பதில் அளித்த சசி தரூர், "வலிமையான ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. எனது கருத்துக்கள் இந்தியாவின் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட தேசியவாத கண்ணோட்டத்தில் உள்ளன. பொருளாதாரம், ராஜதந்திர நிலைப்பாடுகளை கருத்தில் கொண்டு செயல்படுவது தார்மீக சரணாகதி அல்ல, பொறுப்பான ஆட்சி நிர்வாகம்" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், "ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை வெளிநாடுகளுக்கு விளக்க அனைத்துக் கட்சி குழுவில் பங்கேற்றது தனிப்பட்ட முயற்சி. சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை ஆதரித்தேன். கட்சி தலைவர் தேர்தலில் உங்களை ஆதரித்தேன். நீங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டபோது நிலைமை தலைகீழாக மாறியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்று கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த கடிதப் போர் காங்கிரஸ் கட்சியில் உள்ள உள் முரண்பாடுகளை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஈரான்-இஸ்ரேல் போர், வெளியுறவுக் கொள்கை, சபரிமலை விவகாரம் என பல்வேறு விஷயங்களில் இருவரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். கட்சி தொண்டர்களிடையே இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தலைவலி கொடுக்கும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு? களத்தில் இறங்கிய மத்திய அரசு!! பறக்கும் உத்தரவு!