இந்த மாதிரி விஷயங்களில் எக்ஸ்ட்ரா கவனமா இருங்க... தவெகவுக்கு காங்கிரஸ் ஜோதிமணி அட்வைஸ்...!
டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமன விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் சிறப்பாக இருக்கும் – ஜோதிமணி எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொண்ட இந்தப் பொறுப்புக்கு, திரைப்படத் தயாரிப்பாளரும் கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபருமான ஒருவர் நியமிக்கப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல், நிர்வாக அனுபவம் கொண்ட பலர் இருக்கும்போது கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரை ஏன் தேர்வு செய்தீர்கள்?,
முதல்வரின் திரைப்பட தயாரிப்பாளராக இருப்பது மட்டுமே இந்தப் பதவிக்கு தகுதியா? என சரமாரியான கேள்விகள் எழுந்துள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி பங்கேற்ற நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றத. இதில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கர்நாடகவை சேர்ந்த நபர் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இதுபோன்ற முக்கியப் பதவிகளில் நியமனங்கள் செய்யும்போது அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க: தமிழன் தான் இளிச்சவாயா ? - முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய பெ.மணியரசன்...!
அந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும். நமது மாநிலத்தின் உரிமைகளையும், உணர்வுகளையும் டெல்லியில் அழுத்தமாகப் பதிய வைக்க தமிழ்நாட்டுச் சூழலை நன்கு அறிந்தவர்களே தகுதியானவர்கள்.
இந்த விவகாரத்தில் மாற்று மாநிலத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்படும் போது, அது தேவையில்லாத விவாதங்களை உருவாக்கி, தமிழ்நாடு அரசின் நன்மதிப்பைப் பாதிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்திவிடும்.
ஏற்கனவே, கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையே மேகதாது அணை உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகள் நீடித்து வரும் வேளையில், கர்நாடகாவை சேர்ந்த ஒருவரைத் தமிழக அரசு டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் விருப்பமில்லை, இது அது தமிழ்நாடு அரசின் நன்மதிப்பை பாதிக்கும், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறினார்.
இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாள அட்டை..? அமைச்சர் பேச்சால் சர்ச்சை..! TTV தினகரன் ஆவேசம்..!