×
 

“நிறுத்துய்யா... நிறுத்துய்யா...” -  செங்கோட்டையன் வந்தா எழுந்துருச்சி ஓடனுமா? - செய்தியாளர் சந்திப்பில் டென்ஷன் ஆன திருநாவுக்கரசர்...!

இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அதிமுகவில் இருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், ஈரோட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்துப் பேசியது அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்த போது தன்னைப் போலவே  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்த திருநாவுக்கரசரை செங்கோட்டையன் சந்தித்தது, தவெகவில் அவர் இணையப்போவதாக யுகங்களை உருவாக்கியது. ஆனால் இதனை மறுத்த திருநாவுக்கரசர் கூட்டணி அல்லது அரசியல் விவகாரங்கள் குறித்து பேசவில்லை என்றும், பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். 

இதனிடையே இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர் ஒருவர், செங்கோட்டையன், திருநாவுக்கரசர் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது,  “நிறுத்துய்யா... நிறுத்துய்யா... தப்பு, தப்பா ஏன் சொல்லுறீங்க”. “நான் போய் யாரைச் சந்திச்சேன். நான் போன கல்யாண வீட்டிற்கு செங்கோட்டையன் வந்திருந்தார். அப்போது பார்த்தேன். தப்பு, தப்பாக கேள்வி கேட்கக்கூடாது?” என செய்தியாளரிடம் சிரித்து பேசி சமாளித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், கல்யாண வீட்டில் விருந்து முடிந்து அமர்ந்திருந்த போது, முன்னாள் அமைச்சர் செக்கோட்டையன் வருவது தொடர்பாக எனக்கு தகவல் தெரிவித்தார்கள். அவர் வருகிறார் என தெரிந்ததுமே நான் அங்கிருந்து ஓட வேண்டுமா?, இல்லை நான் இருக்கிறேன் என்பதற்காக செங்கோட்டையன் தான் ஓட முடியுமா?. கல்யாண வீட்டில் சந்தித்தது, கருமாதி வீட்டில் சந்தித்தை எல்லாம் ஏன் கட்சியுடன் இணைக்கிறீர்கள்? என செய்தியாளரிடம் பதில் கேள்வி எழுப்பிய திருநாவுக்கரசர், நான் போய் செங்கோட்டையனை சந்தித்தேன் என தவறாக கேள்வி எழுப்பாதீர்கள். இருவரும் சந்தித்துக்கொண்டது பற்றி கேள்வி எழுப்புங்கள் என்றார். 

இதையும் படிங்க: "செங்கோட்டையன் பின்னணியில் திமுக..." - போட்டுத் தாக்கிய நயினார் நாகேந்திரன் ...!

தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற எம்.பி. ஜோதிமணி அங்கு அருண் ராஜை சந்தித்து மரியாதை நிமிர்த்தமாக நலம் விசாரித்தார். அப்போது தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அவரது உதவியாளர் கூட அந்த திருமணத்தில் இருந்தார்கள். அதை எப்படி நீங்கள் சந்திப்பு என கூறலாம். ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என முடிவெடுத்துவிட்டீர்கள். அப்படியெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். அகில இந்திய தலைமை திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐவர் குழுவை நியமித்துள்ளனர். அந்த குழு முதற்கட்டமாக மரியாதை நிமிர்த்தமான பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. விரைவில் திமுக சார்பில் குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவித்தார். 

கூட்டணிக்காக ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளதா? அல்லது திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளதா? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு செல்வப்பெருந்தகை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். அப்போது அவரை மீண்டும் இடைமறித்த செய்தியாளர் கூட்டணி என பொதுவாக சொல்வதால் தான் தவெக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தவா? அல்லது திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவா? என்ற குழப்பம் வருகிறது எனக்கேட்டார். இந்த கேள்வியால் டென்ஷன் ஆன செல்வப்பெருந்தகை “நாங்கள் வேறு யாருடனாவது பேச்சுவார்த்தை நடத்த சென்றோமா?” என காட்டமாக பதிலளித்தார். 
 

இதையும் படிங்க: "நான் என்ன தப்பு செஞ்சேன்... கட்சி நல்லா இருக்கனுன்னு தானே நினைச்சேன்..." - அதிமுக Ex. எம்.பி. சத்தியபாமா கதறல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share