×
 

செருப்பால் சீமான் படத்தை அடித்து கிழித்த காங்கிரஸார்... தீயிட்டு கொளுத்தி உச்சக்கட்ட ஆவேசம்...! 

ஆர்ப்பாட்டத்தின் போது சீமானின் உருவப்படத்தை தீயிட்டு எரித்தும் காலணியால் அடித்தும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து மிகக் கடுமையான முறையில் விமர்சித்து வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தயவால்தான் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வெற்றி பெற முடிகிறது என்றும், அக்கட்சிக்கு என தனியாக வாக்கு வங்கி இல்லை என்றும் சீமான் சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

 சீமானின் இந்தத் தொடர் விமர்சனங்களுக்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் எம்.பிக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீமான் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகச் செயல்படுகிறார் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் சீமானை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

காங்கிரஸ் கட்சியினரை இழிவாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் நல்லமணி தலைமையில் மதுரை முனிச்சாலை பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சீமானின் உருவப்படத்தை தீயிட்டு எரித்தும் காலணியால் அடித்தும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மாரிதாஸ் மீது பாய்ந்த சட்டம்... அதிகார திமிரின் உச்சம்..! சீமான் ஆவேசம்..!!

சீமானின் உருவப்படத்தை எரிப்பதாக கூறி ஸ்டாராங்கான  பேப்பரில் பிரிண்ட் எடுத்து வந்ததால் தீக்குச்சியால் தீப்பற்ற வைக்க முயன்றபோதும் பற்றவில்லை , தொடர்ந்து லைட்டரை வைத்து பற்ற வைத்தும்  போதாக்குறைக்கு காற்று வீசியதால்  காங்கிரஸ் கட்சியினர் நீண்ட நேர முயற்சிக்கு பின் தீயை பற்ற வைத்தனர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட தலைவர் நல்லமணி, சீமான் காங்கிரஸ் கட்சி குறித்து பேச அருகதை அற்ற நபர்  சீமான் மனநலம் சரியில்லாதவர் போல பேசிவருகிறார். சீமானை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் ; காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவரிடம் பரிந்துரை பெற்று சீமானை நல்ல மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும், நாங்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருக்கிறோம் இல்லையெனில் சீமான் கடுமையான விளைவுகளை சந்திப்பார் என்றார்.

இதையும் படிங்க: எரிக்காற்று உருளை விலை உயர்வு... மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் வைத்த கோரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share