எடப்பாடியோட எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியும் காலி... அதிமுக - பாஜக கூட்டணியை எகிறி அடித்த செல்வப்பெருந்தகை...!
தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சி இருக்குமா? அல்லது பாஜக விலக்குமா? என்பதுதான் பரபரக்கப்பாக பேசப்பட்டு வருகிறது .
இந்தியா கூட்டணி என்பது தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி தமிழ்நாட்டு மக்களை தலை நிமிரச் செய்யக்கூடிய கூட்டணி, இந்திய கூட்டணி தமிழகத்தை தலைகுனிய செய்யக்கூடிய கூட்டணி. அமித்ஷா எங்கெல்லாம் கையெழுத்திட சொல்கிறாரோ, அங்கெல்லாம் கையெழுத்திட்டு, ஏற்கனவே தலைகுனிய வைத்தவர்கள் அதிமுகவினர். மீண்டும் தலைகுனிய வைக்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சி இருக்குமா? அல்லது பாஜக விலக்குமா? என்பதுதான் பரபரக்கப்பாக பேசப்பட்டு வருகிறது .
பீகாரில் முதலமைச்சராக இருந்த நிதீஷ் குமாரை இறக்கிவிட்டு அவரை மாநிலங்களவை உறுப்பினராக அனுப்பி இருக்கிறார்கள். அங்கே பாஜக முதலமைச்சர் ஆக்கப்படுகிறது என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. எப்போது அதேபோன்று தமிழ்நாட்டில் அதிமுகவை கபளீகரம் செய்யக்கூடிய திட்டங்களை மோடியும், அமித்ஷா வும் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்து கொடுப்பது எந்த வகையில் நியாயம்.
நம்முடைய முன்னோர்கள் அரசியல் மூதாதையர்கள் பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் இன்று தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்து, தமிழ்நாட்டின் வளங்களை பாதுகாத்து தமிழ்நாட்டு மக்களை தலைய நிமிரச் செய்தார்கள். பல திட்டங்களை கொண்டு வந்தார்கள். ஆனால் இன்று டெல்லியில் உள்ள ஒன்றிய அரசிடம் எல்லாவற்றையும் அடகு வைத்துவிட்டு இவர்கள் தப்பித்தால் போதும் என்று அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் இதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்வர்கள் யார்? தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்தவர்கள் யார்? என்பதை தமிழ்நாடு மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த தேர்தலில் மிகப்பெரிய படிப்பினையை கொடுக்கப் போகிறார்கள். 96 தேர்தலில் முடிவுகள் எப்படி இருந்ததோ அதே போல் தான் இந்த தேர்தல் முடிவு இருக்கும்.
இதையும் படிங்க: OVER... OVER..! உங்க ஆட்சியின் ஆயுசு ஓவர்தான் ஸ்டாலின் சார்..!! சாடிய அதிமுக..!!
பாஜகவுடன் அதிமுக இணைந்திருப்பதால் பாஜக சொல்வதை கேட்பதால் தமிழ்நாட்டு மக்கள் அந்த கட்சியை புறந்தள்ளி விட்டார்கள். தேர்தலுக்குப் பிறகு தெரியும் யார் எதிர்க்கட்சித் தலைவர் என்று செல்வபெறுந்தொகை கூறினார். காங்கிரஸ் கட்சியில் எல்லோரும் ஒவ்வொரு கருத்துரிமையை கூறினார்கள். ஆனால் அகில இந்திய தலைமை ஒரு நல்ல முடிவு எடுத்தார்கள். என்ன முடிவெடுப்பார்களோ அதற்கு எல்லோரும் கட்டுப்படுவார்கள். எந்தெந்த தொகுதி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலை எப்படி எதிர்கொள்வது, தேர்தல் சுற்றுப்பயணம் எல்லாவற்றையும் வகுத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் அகில இந்திய தலைமையான ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகா அர்ஜுனா கார்கே வழிகாட்டுதலின் பேரில் இயங்கிக் கொண்டிருக்கிறோம் இணக்கமாக இருக்கிறோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வந்தாச்சு ராஜ்யசபா எலெக்ஷன்... வேட்பு மனுக்கள் பரிசீலனை தீவிரம்..!!