விருத்தாசலம் எம்எல்ஏவுக்கு சீட் தராதீங்க... கொளஞ்சியப்பர் கோயிவில் பிராது சீட்டு கட்டும் காங்கிரஸார் - உட்கட்சி பூசலின் பகீர் பின்னணி...!
விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சியினரின் கோஷ்டி பூசல் கொளஞ்சியப்பர் கோயிலில் பிராது கட்டும் நிலைக்கு சென்றுள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முழுமையாக முடிவடையவில்லை. தொகுதிகள் ஒதுக்கீடு இன்னும் முடிவுறதா நிலையில், விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சியினரின் கோஷ்டி பூசல் கொளஞ்சியப்பர் கோயிலில் பிராது கட்டும் நிலைக்கு சென்றுள்ளது.
கோஷ்டிகளுக்கு பஞ்சமில்லாத கட்சி என்பது காங்கிரஸ் என்பது ஊரறிந்த ஒன்று. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியும், கடலூர் எம்பி விஷ்ணுபிரசாத் தலைமையில் ஒரு அணியும் செயல்படுகிறது. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் உட்கட்சித் தேர்தலில் எம்எல்ஏ ராதாகிருஷ்ணனின் ஆதரவுபெற்ற லாவண்யா மாவட்டத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் அதிருப்தியடைந்த அக்கட்சியைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர், எம்பி விஷ்ணுபிரசாத் பக்கம் சாய்ந்தனர். இந்த நிலையில் விருத்தாசலத்தை அடுத்த மணவாளநல்லூரில் அமைந்துள்ள பழமையான வழிப்பாட்டுத் தலமும், பிராது கட்டி வேண்டுதல் நடைபெறும் கோவிலான கொளஞ்சியப்பர் கோவிலுக்கு மாவட்டத் தலைவரான லாவண்யா தனது ஆதரவாளர்களோடு சென்று, தற்போதைய எம்எல்ஏவான ராதாகிருஷ்ணனுக்கே மீண்டும் சீட் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, முருகப்பெருமானே எங்கள் கோரிக்கை நிறைவேற்று என சீட் எழுதி முனியப்பர் கோவில் முன் உள்ள சூலத்தில் கட்டி விட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: தலை விரித்தாடும் சிலிண்டர் பிரச்சனை... நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்..!!
இந்நிலையில் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் மீது அதிருப்தியில் இருக்கும் மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு பொதுச்செயலாளரான ஜெயகுரு என்பவர், தனது ஆதரவாளர்களோடு கொளஞ்சியப்பர் கோவில் சென்று, தற்போது இருக்கும் எம்எல்ஏவுக்கு சீட் கிடைக்கக் கூடாது என்ற வேண்டுதலை முன்வைத்து சீட்டு எழுதி சூலத்தில் கட்டிவிட்டு வழிபட்டு வந்துள்ளார்.
இதனால் விருத்தாசலம் பகுதியில் நாளுக்கு நாள் காங்கிரஸ் கட்சியினர் இடையே போட்டி நிலவி வருகிறது 2026 சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டு நடைபெறாத போதே காங்கிரஸ் கட்சியினர் இடையே பிரிவு ஏற்பட்டு வருகிறது. விருத்தாசலம் தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு சீட்டு வழங்கப்படுமா இல்லை தேமுதிகவிற்கு வழங்கப்படுமா இல்லை திமுகவிற்கு வழங்கப்படுமா என விருத்தாசலம் தொகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: +2 மாணவி கொடூர கொலை..! மனசாட்சியே இல்லையா..? செல்வப் பெருந்தகை காட்டம்..!!