கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பு... 16 தொகுதிகளில் கதர் சட்டைகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!
இந்த படுகுழிகளில் யார் விழப்போகிறார்கள்? யார் எழப்போகிறார்கள் என்பதுதான் தேர்தல் நேரத்து அரசியல் ஹீட்.
ஜோராக தொடங்கிவிட்டது ஜனநாயக திருவிழா. ஏகப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு பிறகு இருபெரும் திராவிட கட்சிகளும் ஒரு வழியாக கூட்டணியை உறுதி செய்து கிட்டத்தட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு விட்டனர். இதோடு பஞ்சாயத்து தீர்ந்ததா என்றால் இனிமேல் தான் ஆட்டமே ஆரம்பம் என்பது போல இரண்டு கூடாரங்களிலும் குழிபறிக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன. இந்த படுகுழிகளில் யார் விழப்போகிறார்கள்? யார் எழப்போகிறார்கள் என்பதுதான் தேர்தல் நேரத்து அரசியல் ஹீட்.
2026 சட்டப்பரவை தேர்தலில் 169 இடங்களில் ஆதிமுக போட்டியிடும் நிலையில் 175 இடங்களில் திமுகவின் உதய சூரியன் சின்னம் களம் காண்கிறது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய சீட்டுகளில் தான் அதிருப்தி வெளிப்பட தொடங்கி இருப்பதோடு கூட்டணி கட்சிகளை வைத்து செய்ய தொடங்கிவிட்டன திராவிட கட்சிகள். இதனால் தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் கோஷ்டி பூசல், கழக குரல்கள் வெடித்து வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 25 சீட் பெற்ற காங்கிரஸ் இம்முறை தவெகவை வைத்து பூச்சாண்டி காட்டி 28 எம்எல்ஏ சீட் ஒரு ராஜ்யசபா சீட்டை திமுகவிடம் வாங்கியது. காங்கிரஸின் இந்த அணுகு முறையை கண்டு திமுகவினர் கொதித்து போயிருக்கின்றனர். அதேபோல தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்காமல் போனதால் காங்கிரஸிலும் ஒரு தரப்பு கடும் வருத்தத்தில் இருக்கிறது. நிலைமை இப்படியாக இருக்க 2021 தேர்தலில், காங்கிரஸ் வெற்றி கண்ட 18 தொகுதிகளில், தென்காசி, விருத்தாச்சலம் தவிர்த்து, மற்ற 16 தொகுதிகளையும், கடலூர், ஊத்தங்கரை, துறையூர், ஆத்தூர், கவுண்டாளையம், பெண்ணாகரம், சிங்கா நல்லூர், அம்பா சமுத்திரம், கிருஷ்ணகிரி, உசுலம்பட்டி, சங்கரன் கோவில், மேலூர் ஆகிய தொகுதிகளையும் இம்முறை பெற்றிருக்கிறது காங்கிரஸ்.
காங்கிரஸின் சிட்டிங் தொகுதிகளில் கணிசமானவை மீண்டும் அப்படியே காங்கிரஸுக்கு போனதால் ஒரு தரப்பு உடன்பிறப்புகளும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இதர தொகுதிகளில் சீட் எதிர்பார்த்திருந்த இன்னும் சில உடன்பிறப்புகளும் இப்போது அதிருப்தியின் உச்சத்திக்கே சென்று உள்ளடி வேலைகளை தொடங்கி விட்டனர். இது போதாதென தங்களுக்கோ தன் ஆதரவாளர்களுக்கோ சீட் கிடைக்காத அதிர்ப்தியில் இருக்கும் கதர்களும் தங்கள் பங்குக்கு குழித்தோண்ட ஆரம்பித்திருக்கின்றனர். மயிலாடு துறையில் சிட்டிங் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் லோக்கல் திமுகவினருடன் ராசியாக இல்லாததால் நீ திமுக ஓட்டலதான் ஜெயிச்சிருக்க என திமுக சேர்மன் செல்வராஜு சீரிய சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன. இப்படியாக மனக்கசப்பு அதிகரித்து வந்ததால் இம்முறை திமுகவினர் அந்த தொகுதியை எதிர்பார்த்தனர். அது இல்லை என்றானதால் அங்கு ஏகப்பட்ட உள்ளடி வேலைகள் இப்போதே தொடங்கிவிட்டன.
இதையும் படிங்க: காங். வேட்பாளர் தேர்வில் கடும் அதிருப்தி..!! முக்கிய முடிவு எடுத்த மாணிக்கம் தாகூர்..!! அரசியலில் பரபரப்பு..!!
இதுபோக ராஜ்குமாருக்கு சீட் தரக்கூடாது என அக்கட்சியின் எம்பி சுதாவை தலைமை வரை புகார் வாசிக்க தொடங்கி இருக்கிறார். ஓட்டி தொகுதி கடந்து பல தேர்தல்களாகவே காங்கிரஸுக்கே ஒதுக்கப்பட்டு வருகிறது. அங்கு இருமுறையாக எம்எல்ஏவாக இருந்து வரும் கணேஷ் மீதும் தொகுதியில் முணுமுணுப்பு கேட்கிறது. இதனால் இம்முறை திமுகவே அங்கு களமிறங்கும் நிலை இருந்தது. இறுதியில் அங்கு எதிரில் நிற்கும் பாஜகவை காரணம் காட்டி காங்கிரஸே சீட்டை வாங்கிவிட்டது. இதனால் அத்தொகுதி திமுகவினர் காங்கிரஸுக்கு ஒத்துழைக்கும் மனநிலைகள் இல்லை. மாறாக திமுக போட்டியிடும் குன்னூர், கூடல்லூர் தொகுதிகளில் உழைப்பை கொட்ட முடிவெடுத்து விட்டனர்.
அதேபோல ஈரோடு கிழக்கு சமீபத்திய இடைத்தேர்தலில் திமுகவிடம் சென்றதால் 2026லும் சிட்டிங் எம்எல்ஏ சந்திரகுமாருக்குதான் என்று திமுகவினர் வேலை செய்தனர். ஆனால் காங்கிரஸின் கைகளுக்கே போனதால் திமுகவினரி இடையே புலம்பல் அதிகரித்திருக்கிறது. அதை தொடர்ந்து திமுகவினரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்த சிங்காநல்லூரும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவில் சீட் எதிர்பார்த்திருந்த மாஜி எம்எல்ஏ கார்த்திக் டாக்டர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் துரை தமிழ் செல்வன் உள்ளிட்டோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதனால் காங்கிரஸுக்கு எதிராக திமுகவினர் இங்கு ஒத்துழையாமை இயக்கம் நடத்த திட்டமிட்டுருக்கின்றனர். அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசை தொடர்ந்து அவரின் மகன் ராமச்சந்திரன் ராஜ்ஜியம் நடக்க தொடங்கிவிட்டது. அதனால் திமுகவினர் வெளிப்படையாகவே அங்கு அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். மாஜி திமுக எம்எல்ஏ உதயம் சண்முகம் காங்கிரஸுக்கு சீட் கொடுத்தால் தோல்விதான் என சமீபத்தைய பொதுக்கூட்டம் ஒன்றில் வெளிப்படையாகவே பொங்கினார்.
இப்படியாக காங்கிரஸ் பெற்றுள்ள சிட்டிங் தொகுதிகளில் உள்ளடி வேலைகள் வேகமெடுத்திருக்கிறது. மீதமுள்ள தொகுதிகளில் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், அம்பா சமுத்திரம், உசிலம்பட்டி, சங்கரன் கோவில், மேலூர் போன்ற தொகுதிகள் அதிமுக செல்வாக்கும் இருக்கும் பகுதிகளாக இருக்கின்றன. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 18 தொகுதிகளில் அதிமுகவுடன் நேரடியாக மோதுகிறது காங்கிரஸ். இதையெல்லாம் மனதில் வைத்துதான் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தொகுதிகள் தேர்வில் காங்கிரஸ் நலன் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. விற்பனை அணுகு முறையோடுதான் வேட்பாளர் தேர்வு நடக்கும் என்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என பொங்கினார் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சுங்க கட்டண உயர்வு தேவையா? மக்களை சுரண்டும் மத்திய அரசு..! செல்வப் பெருந்தகை கண்டனம்..!!