×
 

இருமல் மருத்திற்காக கட்டுக்கட்டாய் கைமாறிய பணம்... அமலாக்கத்துறையிடம் முக்கிய ஆதாரங்கள்... சிக்கப்போகும் திமுக முக்கிய புள்ளிகள்...!

இந்தியாவையே உலுக்கிய இருமல் விவகாரம் தற்போது தமிழக அரசியலில் புயலை கிளப்பக்கூடும் எனக்கூறப்படுகிறது.

மத்திய பிரதேச மாநிலம் சிந்துவாரா மாவட்டத்தில திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து அடுத்தடுத்து உயிரிழந்தார்கள். அதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் கூட குழந்தைகள் உயிரிழந்தான்ர். இதனையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார் சத்திரத்தில்  உள்ள ஸ்ரீசன் ஃபார்மா என்ற நிறுவனம் தயாரித்த ‘கோல்ட்​ரிப்’என்ற இருமல் மருந்தை உட்கொண்டது தான் காரணம் என தெரியவந்தது. 

அந்த மருந்தில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் எல்லாம் இருந்ததும் அடுத்தடுத்த ஆய்வில்ல கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று காலையிலேயே சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கோல்ட்​ரிப் நிறு​வனத்​தின் உரிமை​யாளர் ரங்​க​நாதனை(75) மத்​தி​யப் பிரதேச போலீ​ஸார் கைது செய்துள்ளனர். 

கடந்த வாரம் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுடைய வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. தமிழக உணவு மற்றும் மருந்து மருந்து தர கட்டுப்பாட்டு நிர்வாகத்தினுடைய இயக்குனர் தீபா, இணை இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோரது வீடுகளிலும், ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 

இதையும் படிங்க: இருமல் மருந்து விவகாரம்... திமுகவுக்கு இதுலயும் அரசியலா? பந்தாடிய அதிமுக

இந்தியாவையே உலுக்கிய இருமல் விவகாரம் தற்போது தமிழக அரசியலில் புயலை கிளப்பக்கூடும் எனக்கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வந்தற்கான பரபரப்பு காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனம் தமிழக அரசு அதிகாரிகளில் ஆரம்பித்து சில அரசியல்வாதிகள் வரைக்கும் பெரிய தொகையை லஞ்சமாக கைமாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான சில ஆதாரங்கள் அமலாக்கத்துறையின் கையில் கிடைத்ததால் தான் தமிழக உணவு மற்றும் மருந்து மருந்து தர கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையடுத்து சுகாதாரத்துறையின் முக்கிய அதிகாரிகள் இரண்டு பேரின் வீடுகளிலும் விரைவில் அமலாக்கத்துறை சோதனை நடத்தக்கூடும் என்றும், அதன் தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய சில முக்கிய புள்ளிகள் வரை அமலாக்கத்துறையின் சோதனை வளையம் விரிவடையக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இருமல் மருத்து விவகாரத்தை தமிழ்நாட்டில் அரசியலாக்கும் வேலைகளை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாக உளவுத்துறை வட்டாரங்களில் இருந்து முக்கிய தகவல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை சென்றிருப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் குடித்த இருமல் மருந்து.. ம.பியில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share