"தவெக தேர்தல் வெற்றி நிரந்தரமானது அல்ல" ... பட்டியல் போட்டு விஜயை விளாசிய முத்தரசன்...!
தவெக தேர்தல் வெற்றி என்பது நிரந்தரமானது அல்ல. ‘இனி இவர்கள்தான், இவர்களைத் தவிர வேறு யாரும் வர முடியாது’ என்று யாராலும் தீர்மானிக்க முடியாது
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, 28-ம் தேதி காலை 10 மணி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் திருவாரூரில் இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் நாகை எம்பி செல்வராஜ். உள்ளிட்ட ஏராளமான கலந்து கொள்வர்.
மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜூன் 12-ம் தேதி காவிரி நீர் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே ஆழ்குழாய் உள்ளிட்ட பாசன வசதிகளை பயன்படுத்தி குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல விவசாயிகள் மழையை நம்பி நேரடி நெல் விதைப்பு செய்தனர். ஆனால் எதிர்பார்த்த மழை கிடைக்காததால் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளனர்.
தற்போது சம்பா சாகுபடியை மேற்கொள்வதற்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலை உள்ளது. கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை வழங்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படியும் தண்ணீர் கிடைக்காததால், மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் கடும் வறட்சியை சந்தித்து வருகின்றன
இதையும் படிங்க: தேவையா.? பேரவையில் குழாயடி சண்டை...! சிபிஎம் சண்முகம் குற்றச்சாட்டு..!
விவசாய சாகுபடி மட்டுமின்றி பல கிராமங்களில் குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் ஏற்கனவே மாண்புமிகு முதலமைச்சர் இழப்பீடு வழங்கி விட்டதாக சட்டப்பேரவையில் அறிவித்தார் இழப்பீடு வழங்கவில்லை குறுவை தொகுப்பு திட்டம் தான் அறிவிக்கப்பட்டது அதுவும் விவசாயிகள் இடையே முழுமையாக சென்றடையவில்லை வரட்சி நிவாரணம் என்பது அறிவிக்கப்படவே இல்லை . ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். குறுவைத் தொகுப்பு திட்டத்திற்குரிய நிதியை உடனடியாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். அதேபோல், குறுவை சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் அறுவடை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பாதிப்பை அதிகாரிகள் முறையாக கணக்கிட்டு, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ஒன்றிய அரசாங்கம் சீர்குலைத்துவிட்டது. சீர்குலைத்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசாங்கம் ஆதரவளிப்பது கவலைக்குரியது. ஒன்றிய அரசு திட்டத்தை செயல்படுத்த 60 சதவீத நிதியும், மீதி மாநில அரசு 40 சதவீத போட்டுக் கொள்ளும் வேண்டுமென்று சொல்லுகிறது பெயரையும் மாற்றிவிட்டார்கள் மகாத்மா காந்தி பெயரையும் எடுத்து விட்டார்கள்.
கடந்த திமுக ஆட்சியின் போது கடந்த ஜனவரி மாதம் கூடிய சட்டப்பேரவையில் அதை கண்டித்து பழைய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது நிலவும் வறட்சி சூழலை கருத்தில் கொண்டு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
விவசாயத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுடைய குடும்பத்திற்கு ரேஷன் அட்டை அடிப்படையில் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம். தேர்தல் காலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஐந்து ஏக்கருக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும் ஐந்து ஏக்கருக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு 50 சதவீத தள்ளுபடி என்று அறிவித்தார்கள் ஆனால் இப்பொழுது முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்தது கடைசியாக மூன்றாவது முறையாக அறிவித்தது விவசாயிகளுக்கு ஏற்புடையது அல்ல பெருமளவில் விவசாயிகள் பயன்பெற மாட்டார்கள்.
விவசாய சங்கங்களின் சார்பில் இரண்டு நாள் சென்னையில் தொடர் போராட்டத்தை நடத்தி அதன் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை சந்தித்தனர் இந்த சந்திப்பின் போது எட்டு அமைச்சர்கள் கலந்து கொண்டனர் விவசாயிகளுடைய பிரச்சனைகளை முழுமையாக காது கொடுத்து கேட்டார்கள். முதலமைச்சரோடு கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதம் அளித்தார்கள், ஆனால் சட்டமன்றத்தில் அறிவிக்கின்ற பொழுது குறிப்பாக ஆதவ் அர்ஜூனா அவர்கள் விவசாய சங்க தலைவர்களிடையே பேசி நீங்கள் கூறியது தான் நாங்கள் அறிவிக்கின்றோம் என்று அறிவித்தது ஏற்புடையது அல்ல.
இரண்டு மூன்று முறை அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் காரணமாக பெரும்பகுதி விவசாயிகள் பயனுடைய மாட்டார்கள் ஒரு சிலர் வேண்டுமானால் பயன் அடையலாம் ஆகவே கடன் தள்ளுபடி முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இந்த இயற்கை சீற்றத்திற்கான நிதியை ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து பெறுவதற்கான முயற்சியை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் இயற்கை பேரிடர் நிதி என பெரும் நிதி ஒன்றிய அரசிடம் இருக்கிறது அங்கிருந்து கேட்டு பெறக்கூடிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
125 நாள் வேலை திட்டத்திற்கு 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்ட போது ஒன்றிய அரசாங்கம் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய பணம் 2000 கோடிக்கு மேல் பாக்கியுள்ளது அவைகளை கேட்டுக்கொள்வதற்குள்ள நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளது. 40 ரூபாய்க்கு விற்பனை செய்த சீனி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல அரிசியின் விலையும் 70 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மற்ற இதர மளிகை பொருள்களும் விலை உயர்ந்திருக்கிறது.
விலையை கட்டுப்படுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் ஒன்றிய அரசாங்கமும் மேற்கொள்ளவில்லை. மாநில அரசாங்கமும் மேற்கொள்ளவில்லை. பண்டிகை காலங்கள் வருகிறது மக்கள் எப்படி பண்டிகை கொண்டாடுவது என்பதை தெரியவில்லை நடவடிக்கையும் நியாய விலை கடைகள் மூலமாக அனைத்து அத்தியாவசிய பண்டங்களையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க செய்ய அரசு உறுதிப்படுத்த உத்தரவாதப்படுத்த வேண்டும்.
மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் பால் விலை போதுமானதாக இல்லை என்றும், பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கால்நடை தீவனங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதால், தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கால்நடை தீவனம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி காலை 10 மணி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும், பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
ஒரு கிராம் தங்கம் ஒரு பைசாவிற்கு தருவதாக பத்திரிக்கையில் வந்த செய்தியை பார்த்து அதை வைத்து நான் சொன்னேன் செய்கூலி சேதாரத்திற்கு ஒரு கிராமுக்கு 1500 வரை செலவாகும். அந்த தொகையை நாங்கள் கேட்க மாட்டோம் அதற்கு பதிலாக ஒரு கிராமிற்கு ஒரு பைசா பெற்றுக் கொள்வோம் என பத்திரிக்கையில் வந்த செய்தியை தவறாக வந்ததால் நேற்று திருமணத்தின்போது ஒரு கிராம் ஒரு பைசா என்று சொல்லிவிட்டேன் சாரி.
இதனிடையே, நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காகவே நாடாளுமன்றம் நடைபெறுகிறது. ஆனால், முக்கிய பிரச்சினைகள் குறித்து உரிய விவாதம் நடைபெறாமல் எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையை பொறுத்தவரை, தற்போதைய சபாநாயகர் பேரவை நடவடிக்கைகளை நடுநிலையுடனும் கண்ணியத்துடனும் நடத்த முயற்சி மேற்கொள்வதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும் குறுகிய நேரத்திலும் அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குறுக்கிடுவதால், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நேரம் வீணடிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுவது வரவேற்கத்தக்கது என்றும், இதன் மூலம் பேரவையில் நடைபெறும் விவாதங்களை பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ள முடிகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் பிரச்சினைகளை முழுமையாக விவாதித்து தீர்வு காணும் வகையில் சட்டப்பேரவை செயல்பட வேண்டும்.அண்ணா திமுக கூட்டணி வெற்றி பெற்ற இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 1996 தேர்தலில் அண்ணா திமுக வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2001-ல் அண்ணா திமுக வெற்றி பெற்ற நிலையில், திமுக தோல்வியடைந்தது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரக்கூடியது.
கடந்த தேர்தலில் திமுக மட்டுமல்ல, எங்கள் அணியும் தோல்வியடைந்துள்ளது. தற்போது எதிரணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; மதிக்கிறோம்.
ஆனால் தேர்தல் வெற்றி என்பது நிரந்தரமானது அல்ல. வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும், தோல்வியடைந்தவர்களாக இருந்தாலும் இதை நினைவில் கொள்ள வேண்டும். ‘இனி இவர்கள்தான், இவர்களைத் தவிர வேறு யாரும் வர முடியாது’ என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. இது ஜனநாயக நாடு. மக்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஆட்சியைத் தேர்ந்தெடுப்பார்கள். தற்போது மக்களின் நம்பிக்கையுடன் இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். அதே நேரத்தில், இந்த வெற்றி நிரந்தரமானது அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்என்றார்
இதையும் படிங்க: சாவு குத்து ஆடுவதில் தகராறு... குடிபோதையில் தவெகவைச் சேர்ந்த இளைஞர் துள்ள துடிக்க வெட்டிக் கொலை...!