விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!
விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என CPM கட்சி வலியுறுத்தி உள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க இதுவரை ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். தவெக தலைவர் பதவியேற்க காலதாமதமின்றி அனுமதிக்க வேண்டும் என தமிழக ஆளுநருக்கு சிபிஎம் வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ ஆட்சி அமைக்கும் வகையில் தமிழக மக்கள் தீர்ப்பு வழங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 சட்டமன்ற உறுப்பினர்களை வழங்கி த.வெ.க.வை தனிப்பெரும் கட்சியாக தமிழக மக்கள் தேர்வு செய்துள்ளனர்.
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் த.வெ.க தலைவர் சி. ஜோசப் விஜய் அவர்கள் மட்டுமே ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார். ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடந்து கொள்வது, தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது என்ற அணுகுமுறையை பிஜேபி கடைபிடித்து வருகிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவா.? இல்லையா.? 24 மணி நேரத்தில் முடிவு..! சிபிஎம் தேசிய செயலாளர் தகவல்..!
இதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் அவரை பதவியேற்க அழைக்காமல் காலம் கடத்தி வருகிறார். இது ஏற்புடையதல்ல என CPM கட்சி தெரிவித்துள்ளது. எனவே, வேறு யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் சி.ஜோசப் விஜயை தமிழக ஆளுநர் உடனடியாக பதவியேற்க அழைப்பு விடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: தேர்தல் முடிவுகள் நெருங்கியாச்சு..! காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தை ஒத்தி வைக்கணும்..! சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்..!!