தவெக வேட்பாளர்களை தோற்கடிப்பதே முதல் வேலை... விஜய்க்கு எதிராக முஷ்டியை முறுக்கும் பெ.சண்முகம்...!
தேர்தல் ஆணையர்களுக்குள் ஒருமித்த கருத்து இன்றி தலைமை தேர்தல் ஆணையர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டுள்ளார்
தேர்தல் ஆணையத்தை தவறான முறையில் நடத்தி முறைகேட்டிற்கு துணை போன தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். எஸ்ஐஆர் உள்ளிட்ட நடவடிக்கைகளை மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். வாக்காளர்களுக்கு துரோகம் இழைத்த தவெக வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். பொன்னேரியில் உடல்தானம் செய்த கட்சி நிர்வாகி படத்திறப்பு விழாவில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கருத்து.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த சிபிஎம் கட்சி நிர்வாகி அனீப் 62, அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக காலமான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அவரது உடல், உடல்தானம் செய்யப்பட்டது. இந்த நிலையில் உடல்தானம் செய்த அனீப் படத்தை திறந்து வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், கடந்த திமுக ஆட்சியில் தெருப்பெயர்களில் சாதிப்பெயர்களை நீக்க வேண்டும் என்ற அரசாணைக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை, உயர்நீதிமன்றத்தால் நீக்கப்பட்டு திமுக அரசின் அரசாணை செல்லும் என வழங்கப்பட்ட தீர்ப்பை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்பதாக கூறினார்.
தற்போதையை அரசு இந்த தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் சாதிப்பெயர்களை வெளிப்படுத்தும் கிராமங்கள், தெருக்கள் பெயர்களை மாற்றி விஞ்ஞானிகள், தியாகிகள் அரசியல் தலைவர்களின் பெயர்களை சூட்டலாம் என வற்புறுத்துவதாக கூறினார். தேர்தல் ஆணையர்களுக்குள் ஒருமித்த கருத்து இன்றி தலைமை தேர்தல் ஆணையர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டுள்ளார் என்ற செய்தி வந்துள்ளது எனவும், இதன் விளைவாக எஸ்ஐஆர் நடவடிக்கையில் 15 கோடி வாக்காளர்கள் நாடு முழுவதும் நீக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சிகரமானது என்றார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் தலைவிரித்தாடும் மின்வெட்டு... விஜய்யின் மின்வாரிய விசிட்டை டாரு டாராக கிழித்த ஆர்.பி.உதயகுமார்...!
இதன் விளைவாக தேர்தல் முடிவுகளில் மாற்றம் வந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுவதாக கூறினார். இத்தகைய முறைகேட்டிற்கு துணை போன, தேர்தல் ஆணையத்தை தவறான முறையில் நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வற்புறுத்துவதாக கூறினார். மேலும் எஸ்ஐஆர் உள்ளிட்ட நடவடிக்கைகளை மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்ற சம்பவங்கள் என்பது அனைத்து ஆட்சி காலங்களிலும் நடைபெற்று வருகிறது எனவும், குற்றங்கள் நடந்த பிறகு விரைவாக கைது செய்து தண்டனை பெற்று தர வேண்டும், குற்றங்கள் நடைபெறாமல் இருக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு தேர்தல் முடிவுகள் வந்த 20நாட்களில் பொறுப்பற்ற முறையிலும், நெறிமுறை தவறி ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் எக்காரணம் கொண்டு வெற்றி பெற கூடாது என்றும், அவ்வாறு வெற்றி பெற்றால் திமுக, அதிமுகவில் இருந்து பலர் ராஜினாமா செய்து அந்த கட்சியில் இணைய ஊக்கமளிப்பதாக அமையும் எனவும், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு துரோகம் இழைத்த 2வேட்பாளர்கள் தோறக்கடிப்படுவது முதன்மையான கடமை என்பதை வலியுறுத்துகிறேன் என்றார். எந்த கூட்டணியிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லை எனவும், முரண்படும் விவகாரங்களில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டாயம் எதிர்த்து நிற்கும் என்றார்.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கில் அடுத்த பூகம்பம்... நேரடியாக களையெடுக்கும் சி.எம்.விஜய்... முக்கிய புள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!