×
 

அப்போ என்ன செஞ்சீங்க.? இப்போ என்ன செய்யுறீங்க.? திமுக அரசை போட்டு தாக்கிய பாலகிருஷ்ணன்.!

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதற்கு அதிமுக ஆட்சியில் கூறிய காரணத்தையே திமுக அரசும் கூறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதற்கு அதிமுக ஆட்சியில் கூறிய காரணத்தையே திமுக அரசும் கூறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினத்தில் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் உள்ளாட்சிகளின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியோடு முடிவடைந்து விட்டது.  பதவிக் காலம் முடிவடைந்தால் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். எனவே, உள்ளாட்சிப் பதவிகள் முடிந்துபோன 28 மாவட்டங்களிலும் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.



கடந்த 2017 -- 2018ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போடப்பட்டது. அப்போது புதிய மாவட்டங்கள் பிரிப்பு, வார்டு வரையறை என அன்றைய அதிமுக அரசு காரணம் கூறியது. இதை எதிர்த்து திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன்படி 9 மாவட்டங்களுக்கு மட்டும் பின்னால் தேர்தல் நடத்தலாம். மீதமுள்ள 28 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 28 மாவட்டங்களில் இருக்கும் உள்ளாட்சிப் பதவிகளுக்குத் தேர்தல் நடத்தவில்லை. நகராட்சி, மாநகராட்சி வார்டு வரைமுறை நடக்கிறது என்று தேர்தலை நடத்தாதற்கு திமுக காரணம் கூறுகிறது.



தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்புதான் உள்ளாட்சிக்குத் தேர்தல் நடைபெறும் என்கிற நிலை உள்ளது. உள்ளாட்சி தேர்தல் தாமதத்தால், நிர்வாகத்தில் 50 சதவீதம் பெண்களுக்கு பதவி கிடைக்க வாய்ப்பில்லாமல் போகும். மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரிகளின் நிர்வாகத்தில், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும். ஊழலுக்குதான் வழி வகுக்கும்" என்று கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடம் உண்டா.? திமுக கூட்டணி கட்சி சொன்ன நச் பதில்!!

இதையும் படிங்க: மாநாட்டுக்கு போகக் கூடாது.. துணைவேந்தர்களுக்கு உத்தரவு போடுங்க முதல்வரே.. ஒரே குரலில் திமுக கூட்டணி கட்சிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share