“ஆதாரம் காட்ட முடியுமா?...” - மு.க.ஸ்டாலினுக்கு ஓபன் சவால் விட்ட அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்...!
மு.க. ஸ்டாலினுக்கு மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான தடுப்புக் காவல் ஆணை இருக்கிறதா? இதுவரை அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் காட்டுகிறார்கள். அதில் தடுப்புக் காவல் ஆணையை மட்டும் காட்டவில்லை.
மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்குக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இப்போது நாம் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். எம்.பி.க்கள் இருந்தால்தான் இந்தியா கூட்டணியில் இருக்க முடியும். அதுவரை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கூட்டணிகள் அனைத்தும் சேர்ந்து, நமது மதச்சார்பற்ற ஜனநாயக வெற்றிக் கூட்டணி சார்பில் முன்வரக்கூடிய இடைத்தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களுக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
இன்னும் நிறைய காலகட்டங்கள் இருக்கின்றன. கண்டிப்பாக இப்போதே பத்திரிகையாளர்கள் திரும்பத் திரும்ப இதையே பேசுபொருளாக வைத்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை. தலைமைச் செயலகம் வேண்டாம், அரசு மரியாதை வேண்டாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். அது குறித்து நான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறேன்.
இந்த புதிய தலைமைச் செயலகத்தைப் பற்றி அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் விஜய் கடைசியாக செய்த ஒரு விஷயம் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது என்று கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: அது மிசா இல்ல... பெண்கள் CASE..!! ஸ்டாலின் கைது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு... திமுகவினர் கொந்தளிப்பு.!!
இங்கே பாருங்கள், அவர்கள் ஏன் இவ்வளவு எதிர்வினையாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. இதில் சர்ச்சைக்கு ஒன்றும் இல்லை. அவர் மிசா சட்டத்தின் கீழ் சென்றாரா, இல்லையா என்பதுதான் சர்ச்சை. அவர் மிசா சட்டத்தின் கீழ் சென்றதாக எல்லாரும் சொல்கிறார்கள்.
இதுவரை மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரைப் பற்றியும் திரும்பத் திரும்ப பேசுவதால், அவர்களுக்குத்தான் இதில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
மு.க. ஸ்டாலினுக்கு மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான தடுப்புக் காவல் ஆணை இருக்கிறதா? இதுவரை அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் காட்டுகிறார்கள். அதில் தடுப்புக் காவல் ஆணையை மட்டும் காட்டவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்களுடைய அதிகாரப்பூர்வ ஊடகங்களில் சில ஆவணங்களை வெளியிட்டிருக்கிறார்கள். இரண்டு, மூன்று ஆவணங்களை வெளியிட்டு, அவை சர்க்காரியா கமிஷனில் தாக்கல் செய்யப்பட்ட சாட்சிய ஆவணங்கள் என்று கூறுகிறார்கள்.
இதில் ஏன் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு, கிட்டத்தட்ட முரசொலியில் இருந்து யாராவது எழுதியதை வைத்து, ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரம் என்று காட்ட முயற்சிக்கிறார்கள்? அதை எப்படி ஆதாரமாகக் காட்ட முடியும்?
ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தால், அதற்கான தடுப்புக் காவல் ஆணையின் நகலைக் காட்ட வேண்டும். தடுப்புக் காவல் ஆணையின் நகல் இல்லாத ஒரே தியாகி இவராகத்தான் இருப்பார் போல இருக்கிறது.
இவரைத் திரும்பத் திரும்ப தியாகியாக முன்னிறுத்துவதால் எந்தப் பயனும் இல்லை. திரு. ஸ்டாலின் அவர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. வேறு சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார் என்பதுதான் கடந்த 30, 40 ஆண்டுகளாக நிலவி வரும் சர்ச்சை.
இதுவரை அவர்களால் ஒரு தடுப்புக் காவல் ஆணையின் நகல்கூட கொடுக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய தியாகியாக கைது செய்யப்பட்டார் என்றால், ஏன் அவருக்கான தடுப்புக் காவல் ஆணையின் நகல் இல்லை?
1989ஆம் ஆண்டு அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கக் கூடாது என்பதற்காக அவற்றை அழித்துவிட்டதாக எல்லோரும் குற்றச்சாட்டு கூறுகிறார்கள்.
மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் தடுப்புக் காவல் ஆணையின் நகல் இருக்கிறது. ஸ்டாலினுக்கு மட்டும் இல்லை. அதற்குப் பதிலாக ஒரு புத்தகத்தையும், ஏதோ ஒரு பத்திரிகை செய்தியையும் காட்டுகிறார்கள்.
புத்தகத்தையும் பத்திரிகை செய்தியையும் பார்த்துவிட்டு யாரும் அவரை தியாகி என்று சொல்ல முடியாது. திரும்பத் திரும்ப இதைப் பெரிதாக்கிப் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை.
இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார்கள். திரு. பரந்தாமன் அவர்களைப் பாருங்கள். அவர் உள்ளூரிலேயே வேலை செய்தவரா? அவர் இருந்த காலங்களில் தொகுதிப் பக்கமே செல்லவில்லை. தொகுதிக்குள்ளேயே செல்லாத, உள்ளூரிலேயே விலை போகாத பரந்தாமன் போன்ற ஒருவரை மதுராந்தகத்தில் போய் நிறுத்துகிறீர்கள்.
நாளைக்கு டெபாசிட் கூட வாங்கவில்லை என்றால், அதற்கான காரணம் திரு. பரந்தாமன்தான் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால், வெளியூரில் இருந்து வேட்பாளரை நிறுத்தப் போகிறோம் என்பதற்காகத்தான் நீங்கள் அந்த மாதிரியான ஒரு வேட்பாளரை நிறுத்தியிருக்கிறீர்கள். இப்போதே அதற்கான தோல்விக்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். இது மக்களுக்கு தெளிவாகத் தெரியும்.
இந்த இரண்டு இடைத்தேர்தல்களிலும் இவர்கள் ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்று சொல்லி எப்படி ரூ.100 கோடி, ரூ.200 கோடி கொண்டு வந்தார்களோ, எத்தனை நூறு கோடி கொண்டு வந்தாலும் மக்கள் அதை வாங்கிக்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதைத் தெளிவாகச் செய்வார்கள். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
இவர்கள் எல்லாம் எங்கிருந்து கொள்ளையடித்தார்கள், தமிழ்நாட்டில் இருந்து எத்தனை லட்சம் கோடி கொள்ளையடித்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும். அந்தப் பணத்தில் இருந்து இன்று ரூ.100 கோடி, ரூ.200 கோடியைக் கொண்டு வந்து ஒவ்வொரு இடைத்தேர்தலுக்கும் செலவு செய்வார்கள்.
அந்த இடைத்தேர்தலில் இவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும். கடந்த தேர்தலில் இவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.50 கோடி, ரூ.100 கோடி செலவு செய்தார்கள். ஆனால் மக்கள் என்ன பதிலடி கொடுத்தார்கள் என்பது தெரியும். அதேதான் இப்போதும் நடக்கும்.
இப்போதும் இதேபோல் ரூ.100 கோடி, ரூ.200 கோடி என்று திருமங்கலம் ஃபார்முலா போன்று கொண்டு வந்து ஒவ்வொரு இடத்திலும் செலவு செய்வார்கள். திமுகவும் அதிமுகவும் மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தைத்தான் இவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதும் மக்களுக்கு தெரியும். திருமங்கலம் ஃபார்முலாவில் இருந்து இவர்கள் எப்படி மாற்றங்களைச் செய்தார்களோ, 2026 தேர்தலில் எத்தனை நூறு கோடி செலவு செய்தாலும் எப்படி மாற்ற முடியவில்லையோ, அதேபோல இந்த இடைத்தேர்தலிலும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் டெபாசிட் கூட கிடைக்காது.
அதற்கான காரணம்தான் பரந்தாமன் போன்ற ஒரு வெளியூர் வேட்பாளர். உள்ளூரில் ஆள் இல்லாமல், வெளியூரில் இருந்து ஒருவரை கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். மதுராந்தகத்தில் இருந்து எக்மோர் தொகுதிக்கு வந்து பார்த்த பரந்தாமன், எக்மோர் தொகுதிக்குள்ளேயே செல்லவில்லை என்று மக்கள் அவரை விரட்டி அடித்தார்கள். அவரைக் கொண்டு வந்து மதுராந்தகத்தில் வேட்பாளராக நிறுத்துகிறீர்கள்.
இதிலேயே தெரிந்துவிட்டது. தோல்விக்கான காரணம் இப்போதே தெரிந்துவிட்டது. வெளியூரில் இருந்து வந்து போட்டியிடுவதற்கு உள்ளூரில் யாரும் தயாராக இல்லை என்பதால்தான் வெளியூரில் இருந்து வேட்பாளரை நிறுத்துகிறார்கள்.
அவர்கள் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். திரும்பத் திரும்ப இந்த மாதிரி போராட்டம் நடத்துகிறார்கள். எப்போது போராட்டம் நடத்தினார்கள் என்பதே இன்று, நாளை என யாருக்கும் தெரியவில்லை எனக்கூறினார்.
இதையும் படிங்க: அதிமுகவை விட்டு விலக தயார்... நிர்மல் குமாருக்கு நேரடி சவால் விட்ட ஆர்.பி.உதயகுமார்... என்ன காரணம்?