இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!
சி.வி. சண்முகம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தவெக வில் இணைவதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி மற்றும் சிவி சண்முகம் என இரு அணிகள் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், சிவி சண்முகத்தைத் தவிர அவரது அணியில் இருந்த பலரும் தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனிடையே இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, சட்டம் ஒழுங்கு மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பு போன்ற சம்பவங்களைக் கண்டித்து திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவெகவை விளாசித் தள்ள காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: EPS வசம் வந்த சாவி..! விழுப்புரம் அதிமுக பிரச்சனைக்கு டாட்..! தணிந்தது பதற்றம்..!!
இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவாளர்கள், ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக நிர்வாகிகளுடன் சிவி சண்முகம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்தக் கூட்டத்தில், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், "நான் எப்போதும் அதிமுகவிற்காக உண்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வந்துள்ளேன். ஆனால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமான அணுகுமுறை கட்சிக்கு நல்லதல்ல" என்ற கருத்தையும் அவர் ஆதரவாளர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, தனது ராஜினாமா முடிவை மாற்றப் போவதில்லை என்றும், தன்னுடன் பயணிக்க விரும்புவோர் தொடரலாம், இல்லையெனில் தங்களது விருப்பப்படி செயல்படலாம் என்றும் நிர்வாகிகளிடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று அவரை சந்தித்த விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் பலரும், தாங்களும் கூட்டாக ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னரே, தனது நிலைப்பாட்டை சிவி சண்முகம் தெளிவாக எடுத்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததாகவும், அந்த தோல்விகளுக்கான காரணம் குறித்து பொதுக்குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும் என சிவி சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சிவி சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், அதிமுகவின் தற்போதைய தலைமையால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும் என்ற கருத்தை முன்வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது ராஜினாமா தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனிடையே, விரைவில் தன்னுடைய மயிலும் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தன்னுடைய ஆதரவாளர்களான 14 ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் சென்று த.வெ.க தலைவரும் முதலமைச்சர் ஆன விஜய் முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் தனிமரமான சி.வி.சண்முகம்... சிவன் கோயிலில் வைத்து எடுத்த அதிரடி முடிவு...!