அரசியலின் அடுத்தடுத்த திருப்பங்கள்..! நாளை முதல் தவெக..! C.விஜயபாஸ்கரின் புதிய ரூட்... முக்கிய அறிவிப்பு..!
தமிழக வெற்றி கழகத்தில் நாளை இணைய இருப்பதாக சி. விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் நாளை தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக அறிவித்திருக்கிறார். சி. விஜயபாஸ்கர் 2011, 2016, 2021 மற்றும் 2026 ஆகிய தேர்தல்களில் இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரான அவர், தொகுதியில் ஒரு வலுவான அடித்தளத்தைப் பெற்றிருந்தார். 2026 தேர்தலில் அவர் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பி. முருகேசனை சுமார் 62,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
ஆனால், தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுக்குள் ஏற்பட்ட உள் மோதல்கள் மற்றும் தலைமை மீதான அதிருப்தி காரணமாக அவர் ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஜூன் 16, 2026 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்து விஜயபாஸ்கர் தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை அளித்தார். சட்டமன்ற விதி 21இன் படி இந்த ராஜினாமா ஏற்கப்பட்டது.
இதன்மூலம் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து 42ஆக ஆனது. இது அதிமுகவுக்கு ஐந்தாவது அல்லது ஆறாவது பெரிய அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவு அளித்த பிற அதிமுக எம்எல்ஏக்களைப் போலவே விஜயபாஸ்கரும் தவெகவில் இணையலாம் என்ற ஊகங்கள் எழுந்தன.
இதையும் படிங்க: திக்... திக்... திகிலில் எடப்பாடி... கூண்டோடு பதவி விலகல்... அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அறிவிப்பு...!
இந்த நிலையில் நாளை தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக சி விஜயபாஸ்கர் அறிவித்திருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதாகவும் கூறினார். நாளை காலை 9:00 மணிக்கு மாமல்லபுரத்தில் நடக்கும் இணைப்பு விழாவில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தவெகவா..? திமுகவா..? அதிமுகவை கைகழுவும் வேலுமணி..? முக்கிய ஆலோசனை..!