×
 

போராட்டத்தை தள்ளிவைத்த தமிழக வெற்றிக் கழகம்.. காரணம் இதுதான்.. வெளியானது முக்கிய தகவல்!!

அஜீத்குமார் மரணத்தை கண்டித்து தவெக சார்பில் நாளை நடக்க இருந்த போராட்டத்தின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய இளைஞர் அஜித்குமாரை திருட்டு வழக்கில் விசாரணை மேற்கொள்ள போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணை என்ற பெயரில் போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் அஜீத்குமாரை கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது. இதுக்குறித்து அக்கட்சியின்  பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையும் படிங்க: அதை ஒரு கட்சியாவே நாங்க நினைக்கல - தவெகவை அசிங்கப்படுத்திய திமுக அமைச்சர்...!

அதில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும் உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ளது. 

இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, வருகிற 03.07.2025 அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டது. ஆனால் நாளை ராஜரத்தினம் மைதானத்தில் ஆசிரியர் போராட்டம் நடைபெறுவதால், தவெக போராட்டம் வரும் 6ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பரபரப்பை ஏற்படுத்திய அஜித் கொலை விவகாரம்.. ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது தமிழக வெற்றிக் கழகம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share